ஒரே பெண்ணை மிரட்டி மாறி  மாறி கற்பழித்த 5 பாதிரியார்கள்….. கேரளாவில் நடந்த கொடுமை…..

 
Published : Jun 27, 2018, 08:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
ஒரே பெண்ணை மிரட்டி மாறி  மாறி கற்பழித்த 5 பாதிரியார்கள்….. கேரளாவில் நடந்த கொடுமை…..

சுருக்கம்

5 church fathers rape a lady in kerala

கேரள மாநிலம் மலங்கராவில் உள்ள தேவாலயத்தில், பெண் ஒருவரை 5 பாதிரியார்கள் மாறி மாறி கற்பழித்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில், பாதிரியார்கள் 5 பேர் இடை நீக்கம் செய் யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்ட மலங்காரா ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் உள்ளது. இந்தியாவிலேயே மிகுந்த பழமை வாய்ந்த தேவாலயம் என இது போற்றப்படுகிறது.

இந்த சர்ச்சுக்கு வரும் பெண் ஒருவருக்கு, திருமணத்திற்கு முன்பே தேவாலயத்திலுள்ள பாதிரியார் ஒருவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பாதிரியாருடன் அந்த பெண் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இரண்டாவது மகளின் ஞானஸ்னானத்தின் போது, அதற்காக வருந்தி தேவாலயத்தைச் சேர்ந்த மற்றொரு பாதிரியாரிடம் கூறி, பாவமன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால், பாவமன்னிப்பின்போது கூறிய தகவலை வைத்தே மிரட்டி, அந்த பாதிரியாரும் பெண்ணை கற்பழித்துள்ளார்.  இதனை வேறு சில பாதிரியார்கள் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, அவர்களும் பெண்ணை அழைத்து மிரட்டி கற்பழித்துள்ளனர்.

இவர்களில் டெல்லியைச் சேர்ந்த பாதிரியாரும் ஒருவர் என கூறப்படுகிறது. இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கவே இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்துள்ளது.

இதையடுத்து பெண்ணின் கணவர்  ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு இது குறித்து தற்போது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம், 5 பாதிரியார்களை இடை நீக்கம் செய்துள்ளது.  மேலும் இது தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருவதால் ஆர்த்தோடக்ஸ் சர்ச் பற்றிய இமேஜ் கடுமையாக சிதைக்கப்பட்டு வருவது எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது என தேவாலய  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!