53 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இன்று 4 ம் கட்ட வாக்குப்பதிவு… உத்தரபிரதேசத்தில் உற்சாகம்..

 
Published : Feb 23, 2017, 08:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
53 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இன்று 4 ம் கட்ட வாக்குப்பதிவு… உத்தரபிரதேசத்தில் உற்சாகம்..

சுருக்கம்

53 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இன்று 4 ம் கட்ட வாக்குப்பதிவு… உத்தரபிரதேசத்தில் உற்சாகம்..

உத்தரபிரதேச மாநிலத்தில்  இன்று 4 ஆம் சட்டமாக 4–ம் கட்டமாக 53 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி  காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியுடுகிறது. இதே போன்று பா.ஜனதா, மாயாவாதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.

403 உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

முதல் 3 கட்டங்களாக  தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்ட நிலையில் இன்று  4–ம் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள  53 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 53 தொகுதிகளிலும் 680 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சம் ஆகும். ஓட்டுப்பதிவுக்காக 19,487 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

 தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவத்தினர் உள்பட 2 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

53 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!