
மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில், இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 263 காசுகள், சில்வர் செயின், நீடில்(ஊசி) ஆகியவற்றை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
3 மணிநேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் மூலம் கிடைத்த தேவையில்லாத பொருட்களின் எடை மட்டும் ஒரு கிலோ இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
6 மாதமாக வயிற்று வலி
இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், “ ரேவா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனக்கு 6 மாதங்களாக வயிற்றுவலி இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது ஏராளமான சிறிய அளவிலான பொருட்கள் இருப்பது தெரிந்தது.
ரூ.790
இதனால் அவருக்கு அறுவை சிசிக்சை செய்ய முடிவு செய்தோம். அறுவைசிகிச்சையில், அந்த இளைஞர் வயிற்றில் இருந்து, 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் காசுகள் 263 எண்ணிக்கையில் இருந்தது. மேலும், சிறிய ஆனிகள், சில்வர் செயின்கள், நீடில்(ஊசி) ஆகியவை அகற்றப்பட்டன உள்ளே இருந்து எடுத்தோம். இந்த அறுவைசிகிச்சை ஏறக்குறைய 3 மணிநேரம் நடந்தது. 790 ரூபாய்க்கு காசுகளை விழுங்கி இருந்தார்.
இளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களின் எடை ஒரு கிலோ இருக்கும். இந்த அறுவைசிகிச்சைக்கு பின், அந்த இளைஞர் உடல்நலன் தேறிவருகிறார்’’ எனத் தெரிவித்தனர்.
639 ஆனிகள்...
கடந்த 2 மாதங்களுக்கு முன் இதே போல கொல்கத்தா நகரில், உள்ள அரசு மருத்துவையில் சிகிச்சைக்கான சேர்ந்த 48வயது மதிக்கத்தக்க நபரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ எடையுள்ள 639 ஆனிகள் அகற்றப்பட்டன. ஒரு குறிப்பிட்ட இடைவௌியில் அந்தநபர் ஆனிகளை தொடர்ந்து விழுங்கி வந்துள்ளது தெரியவந்தது.