40 ஆயிரம் படுக்கைகள் தயார்.... கொரோனாவிற்கு எதிராக அதிரடி காட்டும் ரயில்வே....!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 6, 2020, 5:36 PM IST
Highlights

ஐந்தாயிரம் ரயில் பெட்டிகளை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறுகிய காலத்தில் 2500 பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசால் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன.  தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிரிழப்பும், பாதிப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை உலக முழுவதும் 70,000 பேர் உயிரிழந்துள்ளனர். 13 லட்சம் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. அதேபோல், இந்தியாவில் 4,067 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.  இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர், 292 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் அதன் தீவிரமாக அது பரவி வருவதால், இந்தியாவிலும் அதுபோன்ற நிலைமை ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை பாதிப்பு அதிகரித்தால், அதைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நோயாளிகளை அவசர காலத்தில் தனிமைப்படுத்தும் சிகிச்சைக்காக ரயில் பெட்டிகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. 

கொரோனா பீதியால் வேலை ஆட்கள், கட்டுமான பொருள் தட்டுபாடு, மருத்துவ உபகரண இறக்குமதியில் சிக்கல் என எல்லா பக்கத்தில் இருந்து பிரச்சனைகள் சூழ்ந்து கொண்ட போதும். திறம்பட செயலாற்றிய மத்திய ரயில்வே 2500 பெட்டிகளை முதற்கட்டமாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றியுள்ளன. 

ஐந்தாயிரம் ரயில் பெட்டிகளை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறுகிய காலத்தில் 2500 பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெட்டிகள் அனைத்தும் மருத்துவ அறிவுறுத்தல்களின் படியே  வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!