இந்தியாவின் ஜனநாயக திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

08:55 AM (IST) Jun 05
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில், தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7, லோக் ஜனசக்தி 5, ஜனசேனா 2 என மொத்தம் 292 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. அதேபோல், இண்டியா கூட்டணிக்கு மொத்தம் 234 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் காங்கிரஸ் 99 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களையும், திமுக 40 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
04:49 PM (IST) Jun 04
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
04:48 PM (IST) Jun 04
மேற்குவங்கம் பகரம்பூர் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி பெற்றுள்ளார்.
04:48 PM (IST) Jun 04
மேற்குவங்கம் பகரம்பூர் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வெற்றி பெற்றுள்ளார்.
04:47 PM (IST) Jun 04
நாடு முழுவதும் சுமார் 85% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன:
பாஜக 243 இடங்களில் முன்னிலை வகிக்கிறது (2%க்கும் குறைவான வித்தியாசத்தில் 19 இடங்கள்).
காங்கிரஸ் 100 இடங்களில் முன்னிலையில் உள்ளது (2%க்கும் குறைவான வித்தியாசத்தில் 15 இடங்கள்).
04:43 PM (IST) Jun 04
தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 7வது முறையாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தோல்வியை சந்தித்தார்.
04:35 PM (IST) Jun 04
தருமபுரியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றார். முன்னிலை வகித்து வந்த பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி இறுதி சுற்றுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
04:16 PM (IST) Jun 04
விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் 11 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 563 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை பெற்றுள்ளார்.
04:14 PM (IST) Jun 04
இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
04:11 PM (IST) Jun 04
மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதல்வரும் விதிஷா தொகுதி பாஜக வேட்பாளருமான சிவராஜ் சிங் சவுகான் வெற்றி பெற்றுள்ளார்.
04:08 PM (IST) Jun 04
உத்தரபிரேதச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி தற்போது வெற்றி பெற்றுள்ளார். கேரளாவில் அவர் போட்டியிட்ட வயநாடு தொகுதியிலும் 3 லட்சத்திற்கும் மேலான வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
04:06 PM (IST) Jun 04
நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
04:03 PM (IST) Jun 04
தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தருமபுரி, விருதுநகரில் கடும் இழுபறி நீடித்த நிலையில் தற்போது திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
04:01 PM (IST) Jun 04
தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆரம்பம் முதலே தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் சுமார் 3,25,682 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
தங்க தமிழ்செல்வன் (திமுக) - 3,25,682
டிடிவி.தினகரன் (அமமுக)-1,58,710
நாராயணசாமி (அதிமுக) - 91,493
மதன் ஜெயபால்(நாம் தமிழர்)- 42,160
03:51 PM (IST) Jun 04
திமுக வேட்பாளர்களில் பெரம்பலூர் அருண் நேரு 2,96,430 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். தூத்துக்குடியில் கனிமொழி 275276 வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார். தஞ்சாவூர் முரசொலி 2,28,752; நீலகிரி ஆ.ராசா 2,11,680, ஶ்ரீபெரும்புதூர் டிஆர் பாலு 2,49,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.
03:50 PM (IST) Jun 04
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கும், திமுக வேட்பாளர் மணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக வேட்பாளர் மணி 3,41,827 வாக்குகளும், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,23,583 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.
03:31 PM (IST) Jun 04
மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு வெங்கடேசன் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்து இனிப்பு ஊட்டினார்.
03:17 PM (IST) Jun 04
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
03:16 PM (IST) Jun 04
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், காங்கிரஸ் தலைவர் கார்கே, இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களை ஆலோசனைக்கு அழைத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
03:07 PM (IST) Jun 04
உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா வெற்றி பெற்றுள்ளார்.
03:03 PM (IST) Jun 04
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பின்னடை சந்தித்து வந்த நிலையில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். சௌமியா அன்புமணி 8,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
02:53 PM (IST) Jun 04
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். சௌமியா அன்புமணியை விட திமுக வேட்பாளர் 8,900 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
02:49 PM (IST) Jun 04
இன்று மாலை 7 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார்.
02:46 PM (IST) Jun 04
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே இன்று மாலை இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
02:44 PM (IST) Jun 04
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 100 இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது. இண்டியா கூட்டணியானது 234 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
02:43 PM (IST) Jun 04
கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதி
திமுக வேட்பாளர் கணபதி பா. ராஜ்குமார் முன்னிலை
இதுவரை வாக்கு விவரம்:
திமுக - 2,02,855
அதிமுக - 90,337
பாஜக - 1,63,842
வித்தியாசம் - 39,013 வாக்குகள்
02:40 PM (IST) Jun 04
பீகாரில் பாஜக உடன் கூட்டணி தொடரும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீகாரில் 14 தொகுதிகளில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், 13 இடங்களிலும் பாஜகவும் முன்னிலையில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
02:36 PM (IST) Jun 04
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தொகுதியில் பாஜகவின் மஞ்சு சர்மா வெற்றி பெற்றுள்ளார்.
02:31 PM (IST) Jun 04
ஆந்திர மாநிலம் நரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா, TDP வேட்பாளரை விட 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
02:28 PM (IST) Jun 04
கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இண்டியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் இண்டியா கூட்டணியை ஆதரிக்கும் பட்சத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இண்டியா கூட்டணியை ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
02:23 PM (IST) Jun 04
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 35 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 34 இடங்களிலும், காங்கிரஸ் 7, ஆர்எல்டி 2 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
02:22 PM (IST) Jun 04
Lok Sabha election results: ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு தனது தாய் சோனியா காந்தியின் வெற்றி வித்தியாசத்தை முறியடித்து 2,22,219 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
02:20 PM (IST) Jun 04
திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 429 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
02:19 PM (IST) Jun 04
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய சர்மா, அமேதி மக்களுக்கும், காந்தி குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், வாக்கு எண்ணிக்கை முடியட்டும். அதன் பிறகு பேசுவோம் என்று தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் அமேதியும் ஒன்று. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சியின் இரானிக்கும், காந்தி குடும்பத்தின் விசுவாசி கே.எல்.சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
02:09 PM (IST) Jun 04
இமாச்சலின் மண்டி தொகுதியில் பாஜகவின் கங்கனா ரணாவத் வெற்றி
02:08 PM (IST) Jun 04
திருநெல்வேலி தொகுதியில் தோல்வி அடைந்த பாஜகவின் நயினார் நாகேந்திரன், மக்கள் தீர்ப்பை ஏற்பதாக கூறிவிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார்.
02:07 PM (IST) Jun 04
கர்நாடகாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஹாசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வியடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய அக்கட்சியின் வேட்பாளரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வால் ரேவண்ணா தோல்வி அடைந்தார்.
01:54 PM (IST) Jun 04
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இழுபறி உள்ள நிலையில் வெற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், தேமுதிக நிர்வாகிகள் விஜய பிரபாகரன் வெற்றி அடைந்ததாக ஹார்விப்பட்டி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
01:46 PM (IST) Jun 04
விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தேமுதிகவின் விஜய பிரபாகர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.
01:44 PM (IST) Jun 04
பாரமுல்லா தொகுதியில் ஓமர் அப்துல்லா தோல்வியை தழுவினார்