'UNCLE' என்று அழைத்ததால் ஆத்திரம்.. இளம்பெண்ணை போட்டு தாக்கிய 35 வயது நபர்..

Published : Dec 27, 2021, 09:28 PM IST
'UNCLE' என்று அழைத்ததால் ஆத்திரம்.. இளம்பெண்ணை போட்டு தாக்கிய 35 வயது நபர்..

சுருக்கம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் தன்னை அங்கிள் என்று அழைத்த 18 வயது இளம்பெண்ணை கன்னத்தில் பலமாக அறைந்து தாக்குதல் நடத்திய 35 வயதான நபர் ஒருவரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

உத்தரகாண்ட் மாநிலத்தில் தன்னை அங்கிள் என்று அழைத்த 18 வயது இளம்பெண்ணை கன்னத்தில் பலமாக அறைந்து தாக்குதல் நடத்திய 35 வயதான நபர் ஒருவரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிள் என்ற தன்னை எவ்வாறு அழைக்கலாம் என்று கூறி இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தாக்கிய சம்பவம் உத்தராகண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மோஞ்சி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கீதா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், பேட்மிண்டன் விளையாடுவதில் மாவட்ட அளவில் சிறந்த வீரராக உள்ளார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் நூற்றுக்கணக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். கல்லூரிகளுக்கு இடையேயான அனைத்து போட்டிகளுக்கும் கல்லூரியின் சார்பில் முதல் ஆளாக இவர் கலந்துகொண்டு பரிசுகளை குவித்து வந்தார்.

இந்நிலையில் கல்லூரிகளுக்கு இடையே சில நாட்களில் மீண்டும் போட்டி நடைபெற உள்ளதால் அதற்காக புதிய ராக்கெட் வாங்க முடிவு செய்தார்.  இதற்காக அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஒரு கடையில் விளையாட்டு கருவிகள் சிறப்பாக இருக்கும் என்று மாணவிகள் கூறியது அவருக்கு நினைவுக்கு வரவே, அந்த கடைக்கு சென்று ராக்கெட் வாங்க சென்றுள்ளார். அந்த கடையில் இருந்த கடைக்காரரை அங்கிள் எனக்கு ராக்கெட் மாடலை காட்டுங்கள் என்று கூறியதும், உடனடியாக கோபப்பட்ட அந்த கடைக்காரர் 35 வயதான நான் அங்கிளா? என்று கூறி அந்த பெண்ணின் கன்னத்தில் பலமாக அறைந்ததாக கூறப்படுகிறது. இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். தற்போது அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அந்த நபர் மீது இந்திய தண்டனை சட்டம் 323, 354 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், 18 வயது இளம்பெண், மொஹித் குமாரின் கடையில் பேட்மிண்டன் ராக்கெட் வாங்கியுள்ளார். அதன் ஸ்ட்ரிங் சில விடுபட்டிருந்த காரணத்தால் அதை மாற்ற மீண்டும் கடைக்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் ‘Uncle’ என அழைத்த காரணத்தால் மொஹித் குமார் ஆத்திரமடைந்து அப்பெண்ணைத் தாக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது, எனத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
ஒரே ஃபிரேம்ல ரெண்டு GOAT.. சச்சின் கையால் 'நம்பர் 10' ஜெர்சி வாங்கிய மெஸ்ஸி!