13 வயது சிறுவனுக்கும் 23 வயது பெண்ணுக்கும் நடந்த திருமணம்; ஆட்சியர் கொடுத்த அதிரடி தீர்ப்பு.

 
Published : May 16, 2018, 04:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
13 வயது சிறுவனுக்கும் 23 வயது பெண்ணுக்கும் நடந்த திருமணம்; ஆட்சியர் கொடுத்த அதிரடி தீர்ப்பு.

சுருக்கம்

13 year old boy married 23 year old women collectors advise to the couple

ஆந்திராவின் கர்னூலில் உள்ள உப்பிரஹால் கிராமத்தில், 13 வயதான சிறுவனுக்கும் 23 வயதான பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றதாக, ஒரு அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இந்த சம்பவத்தை குழந்தை திருமணம், அந்த சிறுவனுக்கு எதிராக நடந்திருக்கும் வன்முறை, என எண்ணி விசாரிக்க சென்றவர்களுக்கு. இது காதல் திருமணம் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

ஆனால் இன்னொரு பக்கம் அந்த சிறுவனின் தாய் உடல் நலம் இல்லாதவர். மரணப்படுக்கையில் இருக்கிறார். குடிகாரரான தன் கணவர் தனக்குப்பின் குழந்தைகளை கவனித்து கொள்ளமாட்டார் என்ற பயத்தில், இந்த சிறுவனுக்கு இந்த திருமணத்தை நடத்திவைத்திருக்கிறார். என ஒரு தகவலும் வெளியாகியிருக்கிறது

இணையத்திலும் இந்த முரணான திருமணம் குறித்த செய்தியும், புகைப்படமும் வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.

இதனைத்தொடர்ந்து இந்த திருமணம் செல்லாது எனவும், சட்டத்திற்கு புறம்பானது எனவும், அதிகாரிகள் தரப்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மாவட்ட ஆட்சியர் சத்தியநாராயணன் முன்பு அந்த சிறுவனும், பெண்ணும் நேற்று ஆஜரானார்கள்.

அப்போது அவர்களிடமும் அவர்களின் குடும்பத்தாருடனும் பேசிய ஆட்சியர். சட்டப்படி இந்த திருமணம் செல்லாது. சிறுவனுக்கு 21 வயது ஆன பிறகு அவர்கள் சேர்ந்து வாழ்வதை பற்றி அவர்களே முடிவுசெய்துகொள்ளட்டும். அதுவரை இருவரும் அவரவர் வீட்டில் தனிதனியே வாழ வேண்டும். என கூறி அனுப்பியிருக்கிறார்

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!