1,100 இந்தியர்கள் சவுதியில் இருந்து நாடு திரும்புகிறார்கள்

 
Published : Oct 22, 2016, 09:46 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
1,100 இந்தியர்கள் சவுதியில் இருந்து நாடு திரும்புகிறார்கள்

சுருக்கம்

புதுடெல்லி, அக். 22-

சவுதி அரேபியில் பொருளாதார மந்தநிலை காரணமாக, நிறுவனங்கள் மேற்கொண்ட ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையிழந்த 1,100 இந்தியர்கள் அடுத்த வாரங்களில் இந்தியா திரும்புவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையா வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் பொருளாதாரம் வெகுவாகப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இதனால், அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை குறைத்தும், ஊதியக்குறைப்பும் செய்துள்ளது.

இந்த பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அவர்களை இந்தியாவுக்கு மீண்டும் திரும்ப அழைத்து வரும் பணியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

மேலும், வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களுக்கு உரிய விசாக்களையும், வேலை செய்த நிறுவனங்களில் நிலுவையில் இருக்கும் ஊதியத்தை பெற்றுத்தரவும் சவுதி அரசு உதவி செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் அந்நாட்டு  அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டை விட்டு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வெளியேற தடையில்லா சான்றிதழ் வழங்கவும் மத்திய வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், இந்தியர்கள் அனைவருக்கும் சவூதிஅரசு தடையில்லாச் சான்றிதழும், விசாவும் வழங்கி வருகிறது என அந்நாட்டில் இருக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சாத் குழுமத்தில் பணியாற்றும் இந்திய பணியாளர்களுக்கு விசா வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக இந்தியர்கள் 4 பேர் நேற்றுமுன்தினம் இந்தியா புறப்பட்டுவிட்டனர். மத்திய அமைச்சர் வி.கே.சிங், சவூதியின் தொழிலாளர்துறை அமைச்சரை இது தொடர்பாகச் சந்தித்துள்ளார். அடுத்த வாரங்களில் ஏறக்குறைய 1,100 இந்தியர்கள் நாடு திரும்புவார்கள்'' எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்