bjp news: ரூ.258 கோடி நன்கொடை பெற்ற 7 தேர்தல் அறக்கட்டளைகள் :82% நிதி பெற்ற பாஜ

By Pothy RajFirst Published Apr 21, 2022, 5:08 PM IST
Highlights

bjp news : 7 தேர்தல் அறக்கட்டளைகள் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரிடம்  இருந்து ரூ.258.49 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது.இந்த நன்கொடையில் 82 சதவீதம் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

7 தேர்தல் அறக்கட்டளைகள் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரிடம்  இருந்து ரூ.258.49 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது.இந்த நன்கொடையில் 82 சதவீதம் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

தேர்தல் அறக்கட்டளைகள்(Electoral trust) என்பது அரசுசாரா நிறுவனமாகும். இந்த நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடை வசூலித்து அரசியல் கட்சிகளுக்கு வழங்கும். இந்த நிறுவனத்தின் நோக்கம்  வெளிப்படைத்தன்மையை அதிகப்படுத்தி, தேர்தல் செலவுக்காக நிதியைப் பயன்படுத்துவதுதான்.

தேர்தல் அறக்கட்டளை

இந்த தேர்தல் அறிக்கட்டளைகள் அறிக்கை குறித்து ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதில், “ 23 தேர்தல் அறிக்கட்டளைகளில் 16 அறக்கட்டளைகள் 2020-21ம் ஆண்டுக்கான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளன. இதில் 7அறக்கட்டளைகள் மட்டுமே நன்கொடைகளை வசூலித்துள்ளன.

82% நன்கொடை

இந்த 7 அறக்கட்டளைகளும 2020-21ம் நிதியாண்டில் ரூ.258.49 கோடிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடையை பெற்றுள்ளன. இதில் ரூ.258.43 கோடி(98.98சதவீதம்) பிரித்து அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 82 சதவீத நிதியை பாஜக பெற்றுள்ளது, அதாவது, ரூ.212.05 கோடியை பாஜக பெற்றுள்ளது, பிஹாரில் உள்ள முதல்வர் நிதிஷ் குமாரி ஐக்கிய ஜனதா தளம் கட்சி ரூ.27 கோடி(10.45சதவீதம்) பெற்றுள்ளன. 

ரூ.19 கோடி

மற்ற கட்சிகளான காங்கிரஸ், என்சிபி, அஇஅதிமுக,திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, லோக் ஜன சக்தி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், லோக்தந்திர் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு சேர்த்து ரூ.19.38 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விதிமுறையின்படி, தேர்தல் அறக்கட்டளைகள் ஒவ்வொரு நிதியாண்டும் தாங்கள் பெறும் நன்கொடையில் குறைந்தபட்சம் 95 சதவீத நிதியை பகிர்ந்து அளி்த்துவிட வேண்டும். உபரித் தொகையையும் அந்தந்த நிதியாண்டு முடிவுக்குள் தகுதியான கட்சிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பது விதியாகும்.

தனிநபர்கள்

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு ஆய்வு செய்ததில், நன்கொடை பெற்ற 7 தேர்தல் அறக்கட்டளைகளும் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப்பின் தொடங்கப்பட்டுஅரசியல் கட்சிகளுக்காக நிதி திரட்டி வழங்கியுள்ளது. இதுவரை 23 தேர்தல் அறக்கட்டளைகள் இருந்தாலும், 14 மட்டுமே அதன் பங்களிப்புகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்துள்ளன.

8 தேர்தல் அறக்கட்டளைகள் எந்தவிதமான நன்கொடையும் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளன. 2020-21ம் ஆண்டில் 159 தனிநபர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர். இருவர் ரூ.3.50 கோடியை நன்கொடையாக ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளனர். 153 பேர் ரூ.3.202 கோடி வழங்கியுள்ளனர். 3 தனிநபர்கள் ரூ.5 லட்சம் வீதம், எயின்ஜிகார்டிக் தேர்தல் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளனர் என ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!