Plastic Tiffin Box : நாகரீகம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில், பல பழக்க வழக்கங்களும் மாறிவிட்டன. குறிப்பாக சமைத்த உணவை வெளியே எடுத்துச்செல்லாம் முறை பெரிய அளவில் மாறியுள்ளது.
வாழை இலை
ஒருகாலத்தில், தேக்கு மற்றும் வாழை இலைகள் மட்டுமே, சமைத்த உணவை உண்ணவும், அல்லது வெளியில் எடுத்துச்செல்லவும் பயன்பட்டது. நாளடைவில் அது மாறி, உலோகங்களின் புழக்கம் அதிகரிக்க துவங்கியது. 90களின் இறுதிவரை பெரிய அளவில் உலோக வகை டிபன் பாக்ஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை அப்படியே மாறிவிட்டது என்றே கூறலாம்.
பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் பள்ளி செல்லும்போது எடுத்துச்செல்லாம் டிபன் பாக்ஸ் முதல் தண்ணீர் பாட்டில் வரை எல்லாமே பிளாஸ்டிக் தான். நம் வீடுகளில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் பொருட்களே என்பதையும் நம்மால் மறுக்க முடியாது. பிளாஸ்டிக் நம் வாழ்வில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.
பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் ஏற்படும் திடீர் தொப்பை.. இதை எல்லாம் பாலோ பண்ணா ஈசியா குறைக்கலாம்..
பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். ஆகவே தான் குழந்தைகளுக்கு சத்தான ஆகாரத்தை கொடுக்க துவங்கியுள்ளனர். ஆனால் அதை எதில் வைத்து கொடுக்கிறார்கள் என்று வரும்போது தான் பெரிய அளவில் பிரச்னை ஏற்படுகிறடித்து. உண்மையில் சொல்லப்போனால் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்களை யாரும் பயன்படுத்தக் கூடாது.
அவை அழகாக, விலை குறைவாக இருந்தாலும், அதில் பெரிய ஆபத்து உள்ளது, சரி என்ன ஆபத்து என்று இப்பொது பார்க்கலாம்.
ஹார்மோன் சமநிலையின்மை
பிஸ்பெனால் என்பது பல பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படும் ஒரு வேதிப்பொருள். ஆனால் இது ஹார்மோன் சமநிலையின்மை, ஆரோக்கிய குறைபாடு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும். இவை குழைந்தைகள் உண்ணும் சில வகை பிளாஸ்டிக் டிபன் பாக்சில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதார பிரச்சினைகள்
பிளாஸ்டிக் டிபன் பாக்சில் சூடான உணவு அல்லது தண்ணீரை வைத்திருப்பது பிளாஸ்டிக் இரசாயனங்களை உணவில் வெளியிடும். இவை நம்மை பல உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாக்குகின்றன. மேலும், பிளாஸ்டிக் கொள்கலன்களின் அதிகப்படியான பயன்பாடு பிளாஸ்டிக் துகள்களை உடைத்து மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உருவாக்குகிறது. இவை நம் உடலில் நுழைந்து பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்குகின்றன.
தைராய்டு
நீங்கள் தினமும் சாப்பிட அல்லது தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்தினால், தைராய்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், பிளாஸ்டிக்கில் இருக்கும் சில ரசாயனங்கள் சரும அலர்ஜியை உண்டாக்கும். சூடான உணவை பிளாஸ்டிக் கொள்கலனில் அடைத்தால், பிளாஸ்டிக் உருகும். இதனால் அதில் பாக்டீரியா பரவுகிறது.
தூக்கத்தில் இருக்கும் போதே உடலுறவு.. பலரும் பேச தயங்கும் இந்த பாதிப்பு பற்றி தெரியுமா?