"பிரேக்கப்" உங்கள் மனதை மட்டுமல்ல.. உடலை கூட சீர்குலைக்கும் தெரியுமா? Experts சொல்லும் அதிர்ச்சி தகவல்!

By Ansgar R  |  First Published Aug 3, 2024, 10:30 PM IST

Effects of Breakup : ஒரு நல்ல உறவின் முறிவு என்பதும் உங்கள் மனதை மட்டுமல்ல, உங்கள் உடலையும் பாதிக்கிறது தெரியுமா? இதுகுறித்து மருத்துவர்கள் சொல்வதென்ன?


உறவுகளை மகிழ்ச்சியாகவும், அழகாகவும் கொண்டுசெல்லவேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் சிலர், சில காரணங்களால் அதை தொடர முடியாமல் பிரிந்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில் அதீத நேசத்தோடு ஒரு நல்ல உறவில் இருப்பவர்கள் பிரிந்தால், அந்த முறிவு மன ரீதியான வலியை மட்டுமல்ல, பல நோய்களையும் ஏற்படுத்துகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?.

ஆம், இந்த அழகான உறவின் முறிவு மன வலியோடு சேர்த்து, உடல் ரீதியான வலியையும் அதிகரிக்கச் செய்கிறது. சரி ஒரு நல்ல உறவு முறிந்தால் உடலில் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்று இப்பொது பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

உண்மையான கதை: மிரட்டும் காதலி.. அவஸ்தைப்படும் காதலன்.. அப்படி என்னதான் ஆச்சு.?!

தூங்குவதில் சிரமம் 

ஒரு நல்ல உறவில் இருந்து பிரிந்த ஜோடிகள், சில நாள்கள் வரை நன்றாக ஓய்வெடுப்பதில்லை. அவர்களால் சரியாக தூங்கமுடியாது, அது நாளடைவில் அவர்களின் ஹார்மோனில் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, அவர்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கும். இது உடல் நலத்திற்கு சிறிதும் நல்லதல்ல. அதனால்தான், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தினமும் இரவில் வெந்நீரில் குளிக்க முயற்சி செய்யுங்கள், மேலும் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களை செய்யுங்கள். 

உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள்

பிரிவு ஏற்பட்ட பின், அது உயர் இரத்த அழுத்தத்திற்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பலருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் கூட உருவாகிறதாம். எனவே இந்த நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க தனியாக அமர்ந்து ஒரே விஷயத்தை சிந்திக்காமல், மற்றவர்களிடம் பேசி மனதை அமைதிப்படுத்த வேண்டும். 

அதிகமாக உண்ணுதல் 

பிரிவு ஏற்பட்ட பிறகு, பலர் தனிமையாக உணர ஆரமிக்கின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் பலரும் தங்கள் சிந்தனையை உணவில் செலுத்துகின்றனர். அதிக அளவிலான உணவுகளை உன்ன துவங்குகின்றனர். இவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். 

இன்று சர்வதேச பீர் தினம்: இந்தியாவில் 8 வகை பீர் பிராண்டுகள் உண்டு!- உங்களுக்கு பிடித்தது எது?

click me!