மனித வாழ்க்கைக்கு உடலுறவு என்பது உணர்ச்சிமிக்கது, தீவிரமானது மற்றும் மகிழ்ச்சியை தருவது. இவை அனைத்தும் ஆணும் பெண்ணும் உடல் ரீதியாகைணையும் போது மட்டுமே ஏற்படுகிறது. ஆனால் இன்றைய நவீன உலகில் நம்மில் ஒவ்வொருவரும் மன அழுத்தம், பதட்டம் உள்ளிட்ட உணர்ச்சிப் பெருக்கலுக்கு உள்ளாகி வருகிறது. இதனால் ஏற்படும் விரக்தி, ஆணையும் பெண்ணையும் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பிரித்து விடுகிறது. குறிப்பாக திருமணமான தம்பதிகளிடையே, இந்த மனப்போக்கு பெரும் பிரச்னையாக உருவெடுக்கக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் திருமண வாழ்க்கைக்கு உடலுறவு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியமானது. இதுதொடர்பான காரணங்களை விரிவாக பார்க்கலாம்.
நெருக்கம் அதிகரிக்கிறது
தம்பதிகள் உடலுறவு கொள்ளும் போது, ஆக்ஸிடாஸின் எனப்படும் உணர்வு சார்ந்த ஹார்மோன் உடலில் உருவாகிறது. இது உங்களுக்கும் உங்களுடைய துணைக்கும் இடையே நேர்மறை மற்றும் காதலுடன் கூடிய உணர்ச்சிகளை ஊக்குவிக்கிறது. உலகின் பிற பகுதிகளைப் பற்றிக் கூட சிந்திக்காமல், ஒருவொருக்கொருவர் ஆழமான உணர்ச்சிகளுக்குள் செல்ல பாலியல் உடலுறவு ஒரு பாலமாக அமைகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது
மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு உடலுறவு சிறந்த வழியாக உள்ளது. உடலுறவுக்கு பிறகு மனம் ஆசுவாசப்படுகிறது. உடலில் தேங்கி இருக்கும் பதற்றம் மற்றும் விரக்தி போன்றவை உடனடியாக விடுபடுகிறது. உடலுறவுக்கு பின் உடலில் ரத்தம் ஓட்டம் சீராகிறது, மனநிலை மேம்படுகிறது. உங்களது மூளையில் டோபமைன் உற்பத்தி அதிகரித்து, உடலுக்குள் நல்ல உணர்வுகள் ஏற்படுகிறது.
அதிக பாலியல் இச்சை கொண்ட பெண்களை எப்படி சமாளிக்கலாம்..? ஆண்களே தவறாமல் படிங்க..!!
இருவரும் இணைந்திருக்க தூண்டுகிறது
வாழ்க்கையில் ஒரு பிடிமானம் இருந்தால், நம்பிக்கை அதிகரிக்கும். அந்த பிடிமானம் தான் திருமணம். திருமணம் பிடிமானமாகவும் நம்பிக்கையாகவும் இருப்பதற்கு உறுதுணை செய்வது உடலுறவு தான். திருமணமான தம்பதிகள் அடிக்கடி உடலுறவு கொள்ளும்போது, அது அவர்களின் திருமண வாழ்க்கையைப் புதுப்பிக்க உதவுகிறது. திருமணத்தில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் உடலுறவின் இயக்கவியலைத் தக்கவைத்துக் கொண்டால் எல்லாமுமே சமமாகி விடும்.
உங்கள் கணவரிடம் ‘அந்த’ படம் பார்க்கும் பிரச்னையுள்ளதா..?? அப்போ இதப்படிங்க..!!
நம்பிக்கை அதிகரிக்கிறது
உடலுறவு உங்கள் துணை மீதான காதலை அதிகரிக்கிறது. உங்கள் துணையுடன் எவ்வளவு அதிகமாக உடலுறவில் ஈடுபடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அந்த உறவு நம்பிக்கை பெறுகிறது மற்றும் வலுவடைகிறது. இதையடுத்து உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது உங்களுக்கு விருப்பப்பட்டதாகவும் நேசிக்கப்பட்டதாகவும் பாராட்டப்பட்டதாகவும் இருக்கும்.
Illegal Affair : ஏன் கள்ளக் காதல் ஏற்படுகிறது? ஆய்வு சொல்லும் 5 உண்மைகள்..!!
பண்பட்ட குணங்கள் பெருகும்
நீங்கள் உடலுறவு கொள்ளும்போது, உங்கள் மனநிலை உடனடியாக இளமையாகி, முன்பை விட உங்கள் மனைவியுடன் இன்னும் நெருக்கமாகிவிட்டது போல உணர்வீர்கள். இதனால் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை ஏற்படும். அதன்மூலம் கிடைக்கும் பண்புகள் உங்களுடைய குழந்தைகளை சென்றடையும். உங்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியான பெற்றோராக நீங்கள் விளங்க முடியும்.