இந்தோனேசியாவில் குக்கரை கல்யாணம் செய்து கொண்ட நபர் ஒருவர் பின்னர் விவாகரத்தும் செய்து அதிரடி காட்டி இருக்கிறார்.
இந்தோனேசியாவில் குக்கரை கல்யாணம் செய்து கொண்ட நபர் ஒருவர் பின்னர் விவாகரத்தும் செய்து அதிரடி காட்டி இருக்கிறார்.
உலகில் பல்வேறு தருணங்களில் பல்வேறு அதிசயமான சம்பவங்கள் நடக்கும். சில விஷயங்கள் கேள்விப்படும் போதே அட அப்படியா..? ச்சேச்சே… அதெல்லாம் அப்படி இருக்காது என்று எண்ண தோன்றும்.
இப்போது அப்படிப்பட்ட ஒரு விஷயம் நடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை…. ஒரு மனிதர் கல்யாணம் பண்ணுகிறார்… அப்புறம் விவாகரத்து பண்ணுகிறார். இதில் என்ன ஆச்சரியப்பட இருக்கிறது என்று கேட்கலாம்… இல்லாமல் இல்லை.
அந்த மனிதர் கல்யாணம் பண்ணியது பெண்ணை அல்ல… ஒரு ரைஸ் குக்கரை… இந்தோனேசியாவில் கொய்ரூல் அனம் என்ற இளைஞர் இப்படி செய்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 2 வாரங்கள் முன்பாக அவர் ரைஸ் குக்கரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.
கல்யாண போட்டோவை ரிலீஸ் செய்தவர் அடுத்த சொன்ன விஷயம் தான் டாப் டக்கர் ரேஞ்சுக்கு இருந்தது. என் மனைவி அழகானவர், பேசாதவர், சொல்பேச்சு நடப்பவர், நன்றாக சமைப்பார் என்று அடுக்கிக் கொண்டே போய் ஆச்சரியம் காட்டினார்.
ஆனால் இப்போது என்னடா என்றால் அந்த அன்பான, பேசாத ரைஸ் குக்கரை தான் டைவர்ஸ் செய்திருக்கிறார். எல்லாம் கலிகாலம்…வேறு என்ன சொல்வது…!