இஸ்ரேலில் உள்ள வீஸ்மேன் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானி கிடியான் யோஃபே தலைமையிலான குழு, விண்கற்கள், மண், புதைபடிவங்கள் மற்றும் டைனோசர் முட்டைகள் உள்ளிட்ட பல மாதிரிகளை ஆய்வு செய்தது. உயிரினங்களால் உருவாகும் அமினோ அமிலங்கள் ஒழுங்கான அமைப்புடன் காணப்பட்டதாகவும், இது உயிர்களின் இருப்பை சுட்டிக்காட்டும் வலிமையான அடையாளமாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் மற்றும் யூரோப்பாவில் புதிய நம்பிக்கை
இந்த புதிய தொழில்நுட்பம் செவ்வாய் கிரகத்தில் பழங்கால நுண்ணுயிர்களின் தடயங்களை கண்டறிய உதவலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். குறிப்பாக, வியாழன் கிரகத்தின் துணைக்கோளான யூரோப்பாவின் பனிக்கட்டிகளுக்கு அடியில் பெரிய கடல் இருப்பதாக கருதப்படுவதால், அங்கு உயிர்கள் இருக்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
விஞ்ஞானிகள் கவனம் செலுத்தும் இடங்கள்:
- செவ்வாய் கிரகம்
- யூரோப்பா துணைக்கோள்
- பனிக்கடல் பகுதிகள்
- பழங்கால இரசாயன அமைப்புகள்
நாசாவின் Europa Clipper மிஷனுக்கு உதவுமா?
2030-31 வயதில் யூரோப்பாவை அடையவுள்ள நாசாவின் Europa Clipper விண்கலம், அங்குள்ள பனித் துகள்களை ஆய்வு செய்ய உள்ளது. இந்த புதிய BioSignature முறையின் மூலம், அங்குள்ள உயிர்களின் தடயங்கள் உள்ளதா என்பதை மேலும் துல்லியமாக கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.