தெற்கு ஜப்பானின் கடல்பரப்பு கொதிப்பது போன்று ரையோ தத்சுகி ஓவியம் வரைந்திருக்கிறார். அதாவது ஜப்பானின் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை சீற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக மிக மோசமான சுனாமி ஏற்படலாம் எனவும் ஜப்பான் மட்டுமின்றி தைவான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் சுனாமியால் பாதிக்கப்படுவதை ரையோ தத்சுகி முன்கூட்டியே பார்த்துள்ளதாவும் அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.
ஜப்பான் செல்ல மக்கள் அச்சம்
இந்நிலையில், ஜப்பானின் பாபா வங்காவின் சுனாமி கணிப்பால் சுற்றுலா பயணிகள் அச்சம் காரணமாக ஜப்பானுக்கு செல்வதை தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஜப்பானில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் நிலையில், இந்த முறை ஜப்பான் ஹோட்டல்களில் முன்பதிவு 50% குறைந்துள்ளதாக ஜப்பான் டெய்லி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜப்பான் ஹோட்டல்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளும், விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளும் தங்கள் பயணங்களை ரத்து செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.