பல பாகிஸ்தான் சர்வதேச விவகார நிபுணர்கள், அணு விஞ்ஞானிகள் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு அணுசக்தி பேரழிவைத் தவிர்க்க அத்தகைய ஒப்பந்தம் அவசியம் என்று கூறுகின்றனர். இஸ்லாமாபாத்தில் உள்ள குவைத்-இ-அசாம் பல்கலைக்கழகத்தின் அரசியல், சர்வதேச உறவுகள் பள்ளியின் பேராசிரியரான பாகிஸ்தான் ஆய்வாளர் டாக்டர் ஜாபர் நவாஸ் ஜஸ்பால் ஒரு கட்டுரையில், "இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான, இராணுவ நோக்கங்களுக்காக ஏராளமான அணுசக்தி நிலையங்களை இயக்குகின்றன. அவர்களின் உறவின் மோதல் தன்மை, ஒருவருக்கொருவர் அணுசக்தி நிலையங்கள் மீது மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது.
அதிர்ஷ்டவசமாக, இந்திய மற்றும் பாகிஸ்தான் கொள்கை வகுப்பாளர்கள் ஒருவருக்கொருவர் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலால் ஏற்படும் கதிரியக்க பேரழிவின் விளைவுகளை அறிந்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் டிசம்பர் 31, 1988 அன்று அணுசக்தி நிலையங்கள் மற்றும் வசதிகள் மீதான தாக்குதல்களைத் தடைசெய்து இந்தியா-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு அல்லாத ஒப்பந்தத்தில் உடன்பட்டனர்.