பாகிஸ்தான் தலையில் விழுந்த துண்டு.. காய்கறி விலை தாறுமாறு உயர்வு.. கடன் நெருக்கடியால் வந்த சிக்கல்

Published : Oct 26, 2025, 12:24 PM IST

ஜூன் 2025 நிலவரப்படி, பாகிஸ்தானின் மொத்த பொதுக்கடன் 13% அதிகரித்து 80.6 டிரில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. இதில் உள்நாட்டுக் கடன் 54.5 டிரில்லியனாகவும், வெளிநாட்டுக் கடன் 26.0 டிரில்லியனாகவும் உள்ளது.

PREV
13
பாகிஸ்தான் கடன்

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஜூன் 2025 நிலவரப்படி பாகிஸ்தானின் மொத்த பொதுக்கடன் 80.6 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாயை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டை விட 13% அதிகம் ஆகும். ஜூன் 2025-ல் பாகிஸ்தானின் மொத்த பொதுக்கடன் 80.6 டிரில்லியன் ரூபாயை எட்டியது. இதில் உள்நாட்டுக் கடன் 54.5 டிரில்லியன், வெளிநாட்டுக் கடன் 26.0 டிரில்லியன். இது கடந்த நிதியாண்டை விட 13% அதிகம்.

23
பாகிஸ்தானின் கடன்-ஜிடிபி விகிதம்

பாகிஸ்தானின் கடன்-ஜிடிபி விகிதம் ஜூன் 2024-ல் 68% ஆக இருந்தது, ஜூன் 2025-ல் 70% ஆக உயர்ந்துள்ளது. எதிர்பார்த்ததை விட ஜிடிபி வளர்ச்சி குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் ஆண்டுக்கு 15% அதிகரித்து ஜூன் 2025-ல் 54.5 டிரில்லியன் ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில், வெளிநாட்டு கடன் 6% அதிகரித்து 91.8 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

33
பொருளாதார நெருக்கடி

ஜூன் 2025 நிலவரப்படி, பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடனில் 84% மத்திய அரசின் கீழும், மீதமுள்ள 16% மாகாண அரசுகளின் கீழும் உள்ளது என அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மாகாணங்களில், பஞ்சாப் 6.18 பில்லியன் டாலர் கடனுடன் முதலிடத்தில் உள்ளது. சிந்து மாகாணத்தின் கடன் 4.67 பில்லியன் டாலர். நடப்பு நிதியாண்டில் சிந்துவின் கடன் வளர்ச்சி அதிகமாக இருந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories