ஈரானில் நிலைமை தொடர்ந்து கட்டுக்கடங்காமல் சென்று வரும் நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது
ஈரானில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
ஈரானி உச்ச தலைவரும், மதத் தலைவருமான அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அயதுல்லா அலி கமேனி அரசு போராட்டம் நடத்தும் மக்கள் மீது வன்முறையை ஏவி வருகிறது. இதில்2,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படதாக தகவல் வெளியாகி உள்ளது.
23
இந்தியர்கள் உடனே வெளியேற அறிவுறுத்தல்
மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு இணைய சேவை முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது. ஈரானில் நிலைமை தொடர்ந்து கட்டுக்கடங்காமல் சென்று வரும் நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியேறி விடுங்கள். ஈரானில் இருந்து வெளியேறாதவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
33
எந்நேரமும் போர் வெடிக்கலாம்
ஈரான் மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், 'ஈரான் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துங்கள். உங்களுக்கு உதவி வந்த் கொண்டிருக்கிறது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
ஈரான் மீது அமெரிக்கா வான்வழித்தாக்குதல் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 'எங்கள் மீது கைவைத்தால் பதிலடி கொடுப்போம்' என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் எந்த நேரமும் போர் வெடிக்கலாம் என்பதால் இந்தியர்கள் ஈரானை விட்டு வெளியேற வெளியுறவுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.