1.4 டிரில்லியன் சொத்து
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக, சவுதி அரேபியாவில் ஹவுஸ் ஆஃப் சவுத் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 1.4 டிரில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த குடும்பங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
செழுமையான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற அவர்கள் விலையுயர்ந்த டிசைனர் ஆடைகளை அணிந்து கொண்டு ஆடம்பரமான ஹோட்டல்களில் தங்குகின்றனர். சவுத் மாளிகையின் மதிப்பு பிரிட்டிஷ் அரச குடும்பத்தை விட பதினாறு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.
சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்
சவூதி அரச குடும்பம் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் தலைமையில் உள்ளது. இந்த புகழ்பெற்ற குடும்பம் சுமார் 15,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
அல்வலீத் பின் தலால் அல் கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் நிகர மதிப்புடைய சொத்துடன் சவூத் குடும்பத்தில் பணக்காராக இருக்கிறார். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் சொத்து மதிப்பு இதுவரை வெளிவரவில்லை.
ஆடம்பரமான குடியிருப்பு
ரியாத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான அல் யமாமா அரண்மனை சவுதி அரேபியாவின் அரசரின் அதிகாரப்பூர்வ இல்லமாக செயல்படுகிறது. உலகம் முழுவதும் இந்த அரச குடும்பத்துக்கு ஏராளமான ஆடம்பரமான குடியிருப்புகள் உள்ளன.
அல் யமாமா அரண்மனை, 4 மில்லியன் சதுர அடியில் 1983 இல் கட்டப்பட்டது. அழகான நஜ்டி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மாளிகையில் ஒரு திரையரங்கம், பல நீச்சல் குளங்கள், ஒரு மசூதி போன்ற பல கூடுதல் அம்சங்கள் உள்ளன. பிரம்மாண்டமான ஆயிரம் அறைகள் உள்ளன.
எர்கா அரண்மனை
ரியாத்தின் மையத்தில் எர்கா அரண்மனை உள்ளது. இது நீதிமன்ற கூட்டங்கள், விஐபி பொழுதுபோக்கு மற்றும் அரசாங்க செயல்பாடுகளை நடத்துவதற்கான முக்கியமான அலுவலக இடமாக செயல்படுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வருகையின் போது அவரை வரவேற்று வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அரண்மனை முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட க்ளீனெக்ஸ் டிஸ்பென்சர்கள் உள்ளன. தங்க நாற்காலிகள் வளாகத்தை அலங்கரிக்கின்றன.
சொகுசு கப்பல்கள்
சவூதி அரச குடும்பம் பல சொகுசு கப்பல்களை வைத்துள்ளது. இதில் இளவரசர் முகமது பின் சல்மானின் 400 மில்லியன் டாலர் மதிப்புடைய செரீன் சூப்பர்யாட், இரண்டு ஹெலிபேடுகள் மற்றும் ஒரு விளையாட்டு மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
அரண்மனைக்குச் சொந்தமாக உலகின் மிகப்பெரிய வணிக விமானமான போயிங் 747-400 உள்ளது. அரசு குடும்பத்தின் மற்றொரு முக்கிய உறுப்பினரான டர்கி பின் அப்துல்லா, 22 மில்லியன் டாலர் மதிப்புள்ள கார்களை வைத்திருக்கிறார். இதில் லம்போர்கினி அவென்டடோர் சூப்பர்வெலோஸ், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் கூபே, மெர்சிடிஸ் ஜீப் மற்றும் பென்ட்லி போன்ற ஆடம்பரமான மாடல்கள் உள்ளன.