சைபர் தாக்குதல்களில் இந்தியா 2வது இடம்; முதல் இடம் எந்த நாடு? சைபர் அட்டாக்கை தடுப்பது எப்படி?

First Published | Jan 5, 2025, 3:29 PM IST

உலகளவில் சைபர் தாக்குதல்களில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களை பார்க்கலாம். 

Cyber Attack

சைபர் தாக்குதல்கள் 

இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம் மிகவும் இன்றியமையாத தேவையாக உள்ளது. கல்வித்துறை, மருத்துவத்துறை, விண்வெளித்துறை என அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது. ஆனால் அந்த தொழில்நுட்பமும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இணைய குற்றவாளிகள் அடிக்கடி சைபர் தாக்குதல்களை தொடுத்து தொழில்நுட்பத்தை சீர்குலைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சைபர் தாக்குதல்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக கிளவுட்சேக் என்ற நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், 2024ம் ஆண்டு டேட்டா கசிவுக்கு வழிவகுக்கும் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.  2024ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 95 சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Cyber Attack in india

இந்தியா 2வது இடம்?

2024ம் ஆண்டு 140 சைபர் தாக்குதல்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்றும்  57 சைபர் தாக்குதல்களுடன் இஸ்ரேல் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் கிளவுட்சேக் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் வேகமாகப் பரவி வரும் இந்தியாவில் நிதி மற்றும் வங்கித் துறை 20 சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக டார்க் வெப் டேட்டாவை பகுப்பாய்வு செய்து கிளவுட்சேக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் இந்தியாவில் அரசு நிறுவனங்கள் தொடர்பான 13 சைபர் தாக்குதல்களும், தொலைத்தொடர்பு துறையில் 12 சைபர் தாக்குதல்களும், சுகாதாரத் துறையில் 10 சைபர் தாக்குதல்களும், கல்வித் துறையில்  9 சைபர் தாக்குதல்களும் நடைபெற்றுள்ளதாக கிளவுட்சேக் கூறியுள்ளது. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக அமெரிக்காவும், புவிசார் அரசியல் பிரச்சினைகளுக்காக இஸ்ரேலும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அட! சிகரெட் பிடிப்பதை நிறுத்த ஸ்மார்ட்வாட்ச் உதவுமா? ஆய்வில் வெளியான குட் நியூஸ்; முழு விவரம்!

Tap to resize

How to prevent cyber attacks?

மிகப்பெரிய தரவுகள் கசிவு

கடந்த 2024ம் ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தரவுகள் கசிந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தரவுகள் கசிந்தன. இதேபோல் தொலைத்தொடர்பு துறையிலும் அதிக அளவு சைபர் தாக்குதல்கள் நடந்தன. மேலும் 2024ம் ஆண்டு நாட்டில் 108 ரேண்டம்வேர் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக கிளவுட்சேக் வெளியிட்ட அறிக்கையில் கூறபப்ட்டுள்ளது.

Worldwide cyber Attack

சைபர் தாக்குதல்களை தடுப்பது எப்படி? 

பொதுவாக ஒரு நிறுவனத்தில் சைபர் தாக்குதல்களை தடுப்பதற்கான முதல் படி ஒரு வலுவான, தனித்துவமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவதாகும். ஒரு வலுவான பார்வேர்டு பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களின் கலவையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 

நிறுவனத்தின் மென்பொருளை அடிக்கடி அப்டேட் செய்து வந்தால் சைபர் தாக்குதல்கள் நடைபெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. மென்பொருள் அப்டேட்களை அடிக்கடி சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும். நிறுவனத்தின் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் தரமான பாதுகாப்பு சாப்ட்வேர்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு செம நியூஸ்; உங்களின் நீண்டநாள் கனவு நிறைவேற போகிறது; சூப்பர் அப்டேட்!
 

Latest Videos

click me!