BSNL 4G Service
பிஎஸ்என்எல் சேவை
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 3ஜி, 4ஜி என்பதையும் தாண்டி 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. வோடோபோன் ஐடியா 5ஜிபி சேவையை கொண்டு வர தயாராக உள்ளது. ஆனால் அர்சின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவயை தான் வழங்கி வருகிறது.
ஆனாலும் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வருவதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சாய்ந்து வருகின்றனர். பிஎஸ்என்எல் எப்போது 4ஜி சேவையை வழங்கும்? என்று அதன் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், அவர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் வகையில் பிஎஸ்என்எல் ஒரு குட் நீயூஸ் சொல்லியுள்ளது.
BSNL Recharge Plans
4ஜி சேவை எப்போது?
அதாவது பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. 4ஜி சேவை வழங்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை நாடு முழுவதும் முழுமையாக கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஎஸ்என்எல் 4ஜி சேவை வரும்போது முன்பு இருந்து இயங்கி வந்த 3ஜி நெட்வொர்க் முடக்கப்படும்.
முதற்கட்டமாக சில இடங்களில் 3G நெட்வொர்க்கை நிரந்தரமாக பிஎஸ்என்எல் நிறுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கப்படும் இடங்களில் 3ஜி சிம்கள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு காலிங் வசதி மட்டுமே கிடைக்கும், டேட்டா வசதி கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்? VRS வேண்டாம், பிரமோஷன் வேண்டும் - BMS
BSNL Best Plans
4ஜி சிம் கார்டு எப்படி பெறுவது?
இது தொடர்பாக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் ஆர்.கே.சௌத்ரி கூறுகையில், ''பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் 4ஜி நெட்வொர்க் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் 3ஜி நெட்வொர்க் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15 முதல் மீதமுள்ள பகுதிகளில் 3ஜி சேவையும் நிறுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.
4ஜி சேவை முழுமையாக வந்த பிறகு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று பழைய 3ஜி சிம் கார்டுகளை கொடுத்து விட்டு புதிய 4ஜி சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
BSNL INDIA
வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்
வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். 2017ஆம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட சிம் மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிஎஸ்என்எல் 4ஜி சேவை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் ஜிரோ, ஏர்டெல், வோடோபோன் ஆகிய நிறுவனங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நோக்கி படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒரு ஸ்மார்ட்வாட்ச் போதும், மருத்துவரே தேவையில்லை; பட்ஜெட் விலையில் இத்தனை நன்மைகளா?