Best Mobile Phones Under 15000
ஒவ்வொரு மாதமும் புதிய மாடல்கள் வெளியாகின்றன. உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுப்பது கடினமாக உள்ளதா? இந்த மாதத்தில் ₹15,000க்குள் உள்ள சிறந்த போன்களின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம். போக்கோ, ரியல்மி, லாவா போன்ற முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் மாடல்கள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
CMF Phone 1
CMF போன் 1 ஆனது 4nm தொழில்நுட்பம், மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட் போன்றவற்றை கொண்டுள்ளது. கிராபிக்ஸ் தேவைகளுக்கு ஏற்ப G615 MC2 GPU இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 256GB வரை UFS 2.2 சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. மைக்ரோ SD கார்டு ஸ்லாட் மூலம் 2TB வரை அதிகரிக்கலாம். 8GB வரை LPDDR 4X RAM கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 நத்திங் OS 2.6 பதிப்பு ஸ்மார்ட்போனை இயக்குகிறது.
Realme 14x
ரியல்மி 14x மொபைல் 6.67-இன்ச் HD+ திரையை 89.97% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 120Hz புதுப்பிப்பு வீதம், 1604x720 பிக்சல்கள் தெளிவுத்திறன் மற்றும் 625 நிட்ஸ் அதிகபட்ச பிரகாசத்துடன் கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 6300 SoC மற்றும் ARM மாலி-G57 MC2 GPU போன்றவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6GB + 128GB மற்றும் 8GB + 128GB மாடல்கள் இரண்டும் 10GB வரை விர்ச்சுவல் RAM மற்றும் மைக்ரோ SD கார்டு அடிப்படையிலான கூடுதல் சேமிப்பிடத்தை வழங்குகின்றன. ஆண்ட்ராய்டு 14, UI 5.0 உடன் போன் செயல்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ரியல்மி 14x பெரிய 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 45W வேகமான சார்ஜிங் இதன் சிறப்பு ஆகும்.
Vivo T3x
விவோ T3x ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. குறிப்பாக 6.72-இன்ச் பிளாட் ஃபுல் HD+ LCD திரை இதன் சிறப்பம்சம் ஆகும். 6 ஜென் 1 SoC T3x திறன் கொண்டது. 128GB உள்ளமை சேமிப்பிடம் உள்ளது. மைக்ரோ SD கார்டு மூலம் 1TB வரை சேமிப்பிடத்தை விரிவாக்கலாம். 6000mAh பேட்டரி 44W வேகமான சார்ஜிங் ஸ்மார்ட்போனின் சிறப்பு. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான FuntouchOS 14 உடன் செயல்படுகிறது.
Lava Blaze Duo
லாவா பிளேஸ் டியோ மொபைல் 6.67-இன்ச் ஃபுல் HD+ 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே 120 Hz புதுப்பிப்பு வீதம் லாவா போனின் சிறப்பு ஆகும். லாவா அக்னி 3 போல, இதன் பின்புறத்தில் 1.58-இன்ச் இரண்டாம் நிலை AMOLED டிஸ்ப்ளேயும் உள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 7025 CPU, பிளேஸ் டியோ 5G இன்டர்னல் அம்சங்கள் கொண்டிருக்கிறது. IMG BXM-8-256 கிராபிக்ஸ் செயலி இணைக்கப்பட்டுள்ளதால் கிராபிக்ஸ்-கேம்களுக்கு ஏற்றதாக அமைகிறது. 128GB உள்ளமை சேமிப்பிடம் திறன், 8GB வரை LPDDR5 RAM உள்ளன. போனின் ஆப்டிகல் அம்சங்களில் 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 64MP பிரதான கேமரா குறிப்பிடத்தக்கவை. முன்புறத்தில் உள்ள 16MP கேமரா வீடியோ அழைப்பு, செல்ஃபிக்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
Poco M7 Pro
போக்கோ M7 புரோ ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் HD+ திரை, 120 Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரைக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா செயலி போக்கோ M7 புரோ 5Gக்கு சக்தி அளிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான போக்கோவின் ஹைப்பர் OS மூலம் இயங்குகிறது. ஆப்டிக்ஸ் அடிப்படையில், கேஜெட் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 50MP சோனி லைட்டியா LYT-600 பிரதான சென்சார் உள்ளன. ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் உள்ளது. முன் கேமரா வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்கு 20MP தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. இது 45W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,110mAh பேட்டரியால் இயக்கப்படுகிறது.
ஹோண்டா ஆக்டிவா இ ஸ்கூட்டர் விலை எவ்வளவு தெரியுமா.?