Tulsi Rituals: குபேர யோகம் தரும் துளசி.! இதை மட்டும் செஞ்சா போதும்.! நீங்கதான் அடுத்த அம்பானி.!

Published : Apr 08, 2026, 06:08 PM IST

துளசி செடியை வெறும் செடியாகப் பார்க்காமல், லட்சுமி தேவியின் அம்சமாகவே கருதுகிறோம். தினமும் துளசி செடிக்கு தண்ணீர் மட்டும் ஊற்றாமல், சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து வழிபட்டால், வீட்டில் லட்சுமி தேவி குடியேறுவாள் என்பது நம்பிக்கை.

PREV
16
அருளை அள்ளித்தரும் வழிபாடுகள்.!

இந்து மதத்தில் துளசி செடிக்கு ஒரு தனிப்பட்ட, சிறப்பான இடம் உண்டு. துளசி பூஜை செய்வதால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஒரு ஆன்மிக நம்பிக்கை. எந்த நாளில் துளசி செடிக்கு என்னென்ன பொருட்களை வைத்து வழிபட வேண்டும், அப்படி வழிபட்டால் அதிர்ஷ்டம் எப்படிப் பெருகும் என்பதை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.இது விஷ்ணு பகவானின் அன்பு மாலையாகக் கருதப்படுகிறது. துளசி பூஜை செய்வதால் லட்சுமி தேவியின் அருள் கிடைத்து, வீட்டில் செல்வம், சமாதானம் நிலவும் என்பது பழங்கால ஆன்மிக நம்பிக்கை. 

26
துளசி பூஜை முறை: திங்கள் கிழமை வழிபாடு

திங்கட்கிழமை துளசி செடிக்கு பச்சைப் பால் ஊற்றுவது ஒரு ஆன்மிக பரிகாரமாக கருதப்படுகிறது. இந்த வழிபாடு சந்திர பகவானின் அருளைப் பெற உதவும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் மனதில் இருக்கும் அழுத்தம், பதட்டம், கவலை போன்றவை மெதுவாக குறைந்து, அமைதி மற்றும் சாந்தம் உருவாகும். மனநிலை தெளிவாகி நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து, உறவுகள் மேம்படும். அதே சமயம், பணவரவு உயர்ந்து, பொருளாதார நிலை வலுப்படும் என்றும் கூறப்படுகிறது. வீட்டில் செல்வ வளம் நிலைத்திருக்க இந்த எளிய வழிபாடு உதவியாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது. 

36
வியாழக்கிழமை துளசி வழிபாடு.!

வியாழக்கிழமை விஷ்ணுவிற்கு மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் துளசி மாடத்திற்கு மஞ்சள் கலந்த நீரை ஊற்றுவது அல்லது மஞ்சள் வைத்து பூஜை செய்வது மிகவும் நல்ல பலனை தரும் என நம்பப்படுகிறது. இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைத்து, வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் விரைவாக நிறைவேறும். தொழில் மற்றும் பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி மற்றும் நல்ல ஒற்றுமை நிலவும். வாழ்க்கையில் தடைகள் குறைந்து, சுப நிகழ்வுகள் நடைபெற வழி அமைக்கும். இந்த எளிய பரிகாரம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. 

46
வெள்ளிக்கிழமை துளசி வழிபாடு.!

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் துளசி செடிக்கு தேன் ஊற்றி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். இதனால் குடும்பத்தில் இருக்கும் சண்டைகள் குறைந்து, கணவன்-மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். உறவுகளில் நெருக்கம் வலுப்பட்டு, மன அமைதி நிலவும். மேலும், செல்வ வளம் பெருக வேண்டுமெனில் துளசி செடிக்கு கரும்புச் சாறு படைக்கலாம். இப்படிச் செய்வதால் வீட்டில் நிலவும் தடைகள் நீங்கி, வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைத்து, வளமான வாழ்க்கை அமையும் என நம்பப்படுகிறது.

56
வீட்டில் எப்போதும் நேர்மறை அதிர்வுகள் இருக்கும்.!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளப்பரிய நன்மைகளைக் கொண்ட துளசி செடி, வெறும் செடி மட்டுமல்ல; அது நம் இல்லத்தின் மகாலட்சுமியாகக் கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் பணவரவு தடையின்றி இருக்கவும், வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகவும் துளசி வழிபாட்டில் சில நுணுக்கமான விஷயங்களைக் கடைப்பிடிப்பது அவசியம். குறிப்பாக, தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் துளசிக்கு நீர் ஊற்றி, "ஓம் துளஸ்யை நமஹ" என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது உங்கள் மனதையும் வீட்டையும் நேர்மறை ஆற்றலால் நிரப்பும். துளசி செடி செழிப்பாக வளரும் வீட்டில் எப்போதும் நேர்மறை அதிர்வுகள் இருக்கும் என்பதால், அதை முறையாகப் பராமரிப்பது மிக முக்கியம்.

66
எதிர்பாராத தனலாபம் கிட்டும்.!

வெள்ளிக்கிழமைகளில் துளசி மாடத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டு, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மகாலட்சுமியின் அருளை நேரடியாக ஈர்க்கும் ஒரு வழியாகும். மாலை நேரங்களில் துளசிக்கு அருகில் விளக்கேற்றி வைத்தால், வீட்டில் உள்ள திருஷ்டிகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். துளசி இலைகளைப் பறிக்கும்போது செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பறிப்பதைத் தவிர்ப்பது ஆன்மீக ரீதியாக நல்லது என்று சொல்லப்படுகிறது. வாஸ்து படி, துளசியை வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும். முறையாகத் துளசியை வணங்கி வந்தால், வீட்டின் பணக்கஷ்டம் நீங்கி, எதிர்பாராத தனலாபம் கிட்டும் என்பது முன்னோர்களின் வாக்கு.

Read more Photos on
click me!

Recommended Stories