Vastu Tips: மறந்தும் மற்றவர்களுக்கு இந்த சமையல் பொருட்களை கடனாக கொடுக்காதீங்க! தவறி கொடுத்தால்?

First Published | Apr 18, 2023, 2:52 PM IST

Vastu Tips : பொதுவாக மாதக் கடைசியில் நம் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் நம்மிடமிருந்து ஒரு சில சமையல் /ரேஷன் பொருட்களை கடன் கேட்பது வழக்கமாக நடைபெறும்.

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது படி, சில சமையலறைப் பொருட்களை நாம் அடுத்தவர்களுக்கு கடனாக கொடுக்கும் போது அது நம் வீட்டினுள்ள லக்ஷ்மியை அவர்களுக்கு கொடுப்பதற்கு சமம்.

அப்படியான லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த பொருட்களை நாம் அடுத்தவர்களுக்கு கொடுப்பதால் நம் வீட்டில் இருக்கும் லக்ஷ்மிக்கு கோபம் உண்டாகும் . இதனால் வீட்டில் தேவையற்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டி வரும்

நமது அண்டை வீடுகளில் இருப்பவர்கள் ஏதோ ஒரு அவசர தேவைக்காக பல நேரங்களில் ஒரு சில குறிப்பிட்ட சமையல் பொருட்களை நம்மிடமிருந்து வாங்கி செல்வது வழக்கம்.

இப்படி நாம் அவர்களுக்கு நாம் ஒரு சில பொருட்களை கொடுப்பதன் மூலம், நம் வீட்டில் இருக்கும் மகிழ்ச்சியும், அமைதியும் நம் வீட்டை விட்டு போகும் தவிர நம் வீட்டில் இதுக்கும் லக்ஷ்மி கடாட்சமும் குறையத் தொடங்கும்.

ஒரு சில சமையல் பொருட்களை கடனாக கொடுப்பதற்கு முன் சில வாஸ்து விதிகளையும் தெரிந்து கொள்வது நல்லது.

அடுத்தவர்களுக்கு இந்த பொருட்களை கொடுக்க வேண்டாம்:

வாஸ்து சாஸ்த்திரமானது உங்கள் வீட்டின் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நேரடியாக தொடர்பு கொண்டது. நமது வீட்டின் மகிழ்ச்சி என்பது, வீட்டில் நாம் வைத்துள்ள பொருட்கள் ,நடவு செய்துள்ள மரங்கள் அல்லது செடிகள் மற்றும் அடுத்தவர்களுக்கு நாம் தானமாக கொடுக்கக்கூடிய பொருட்கள் என நாம் செய்யும் அனைத்து விஷயங்களுடனும் தொடர்பு கொண்டது.

அன்னம் மற்றும் பொருட்களை தானம் செய்வதால் மனித குலத்திற்கு நன்மை உண்டாகும் என்று அனைத்து மதங்களிலும் கூறப்பட்டுள்ளன. தவிர வேதங்களும், இதிகாசங்களும் தானம் கொடுப்பதை வலியுறுத்துகின்றன.

ஆனால் சமையல் அறையில் இருக்கும் ஒரு சில  பொருட்களை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதால் பொருளாதார சம்பந்தமான பிரச்சனைகள் வரக்கூடும் .அத்தைகய பொருட்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்

Tap to resize

Image: Pexels

அரிசி:

பொதுவாக அரிசி தானம் செய்தால் நல்லது என்று கூறுவார்கள். பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் நம்மில் பலரும் கோயில்களில் அரிசியை தானமாக கொடுத்திருப்போம்.
அத்தைகய தானம் நல்லதாகவும் ,சிறப்பாகவும் கருதப்படுகிறது. ஆனால், அதே அரிசியை வீட்டில் இருந்து அடுத்தவர்களுக்கு கொடுத்தால் அது நம் வீட்டில் இருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் சேர்த்து கொடுப்பதை போன்று ஆகிவிடும்.

அதாவது ஜோதிட/ வாஸ்து சாஸ்திரத்தில், அரிசியானது சுக்கிர கிரகத்துடன் தொடர்பு கொண்டது. ஆகவே உங்கள் நட்ப மற்றும் சுற்றத்தாருக்கு நீங்கள் அரிசியை கடனாக கொடுக்கும் போது அது சுக்ர தோஷமாக மாறுகிறது.

இந்த சுக்ர தோஷத்தினால் உங்களது வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் உண்டாகும் தவிர எதிர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டில் இருப்பவர்களுக்கு மன ரீதியான மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் உண்டாகும்.

கடுகு / எள் எண்ணெய்:

கடுகு மற்றும் எள் ஆகிய பொருட்கள் சனி கிரகத்துடன் தொடர்பு கொண்டது. ஆகவே அக்கம் பக்கத்தினருக்கு ஏக்கரந்தைக் கொண்டும் இந்த பொருட்களை தந்து விடாதீர்கள்.

சனிக்கிழமைகளில் கோவில்களில் மட்டும் கடுகு/ நல்லெண்ணெயை சனி பகவானுக்கு கொடுப்பது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால், எப்போதும் இந்த எண்ணெய்களை கடனாக கொடுப்பது மங்களகரமானதாக பார்க்கப்படுவதில்லை. இவ்வாறு கொடுப்பதால் அது நாம் அவர்கள் வீட்டின் பிரச்சனைகளை விலைக்கு வாங்குவதற்கு சமம்.

​பால் அல்லது தயிர்:

வாஸ்து சாஸ்திரம் / ஜோதிடத்தின் படி, பால் சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது ஆதலால் நாம் ஒருவருக்கு பால் அல்லது பாலில் செய்யப்பட்ட பொருளை கடனாக கொடுப்பது அது அசுபமாக மாறிவிடும். இதனால் சந்திரன் கெட்டுப் போக கூடும்.சந்திரன் பொதுவாக நமக்கு நன்மை செய்யக்கூடிய கிரகம் ஆகும்.

இப்படி இந்த பொருட்களை நாம் அவர்களுக்கு கொடுக்கும் போது அது நமது வீட்டிலிருக்கும் நல்லதை அடுத்த வீட்டிற்கு நாமே கொடுப்பதற்கு சமமாகும். ஆகையால் எப்போதும் பால் அல்லது பாலில் செய்யப்பட்ட பொருட்களை மற்றவர்களுக்கு மற்றவர்களுக்கு கடனாக கொடுக்கவே கூடாது.

பூண்டு:

பூண்டு மற்றும் வெங்காயம் கேது கிரகத்துடன் தொடர்பு கொண்டதாகும். ஆகவே இந்த பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை கடனாக கொடுப்பதென்பது வீட்டினுள்ள செழிப்பு நின்று விடும்.பின் அதனால் பல்வேறு விதமான பண பிரச்சனைகள் உண்டாகும்

​மஞ்சள்:

அடுத்த படியாக சமையலறையில் இருக்கும் மஞ்சள் குரு பகவானுடன் தொடர்பு கொண்டதால் அதனை நாம் பிறருக்கு கொடுப்பதால் நமது வீட்டில் உள்ள செல்வதை அடுத்தவருக்கு கொடுப்பது போல் இருக்கும்.

​உப்பு:

வாஸ்து சாஸ்திரத்தின்படி, உப்பைக் கடனாக கொடுப்பது என்பது அசுபமாக கூறபடுகிறது. இதனை கடனாக கொடுப்பதால் நிதி நெருக்கடி மற்றும் பற்றாற்குறையை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் அதோடு பல்வேறு இன்னல்களும் குடும்பத்திற்கு உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.

வாஸ்து ரீதியாக மேற் கூறப்பட்டுள்ள பொருட்களை நாம் அடுத்தவர்களுக்கு கடனாக கொடுப்பதால் நமக்கு தீங்கு உண்டாகும். ஏன்னெனில் சமையலறையில் இருக்கும் பொருட்கள் ஒருவரின் தலைவிதியுடன் தொடர்பு கொண்டதாகும்.

வீட்ல விநாயகர் சிலைய இங்க வச்சு பாருங்க! பணமும், அதிர்ஷ்டமும் உங்க வீட்டை தேடி வரும்!

Latest Videos

click me!