Sabarimala Temple Opening : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. 80 ஆயிரம் பேருக்கு அனுமதி! தமிழ்நாட்டு பக்தர்களுக்கு 24 மணி நேர உதவி மையம்!

Published : Nov 16, 2026, 11:14 PM IST

Sabarimala Temple Opening : 2026-ம் ஆண்டு சபரிமலை மண்டல யாத்திரை தொடங்கியது. நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி, டிசம்பர் 27-ல் மண்டல பூஜை, தமிழக பக்தர்களுக்கு 24 மணி நேர உதவி மையம் என முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

PREV
16
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சுவாமியே சரணம் ஐயப்பா! கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப பக்தர்களின் மனதில் பக்திப் பரவசம் பொங்கத் தொடங்கிவிடும். மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி கட்டி, ஐயப்பனின் திருநாமத்தை உச்சரித்தபடி சபரிமலை நோக்கிப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் வருகையால் கேரள மாநிலமே ஆன்மிக மணம் கமழும்.

பதினெட்டாம் படி ஏறி, பொன்னம்பலமேட்டில் ஐயப்பனின் அருளைப் பெற வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் பிரார்த்தனைக்கு வழிவகுக்கும் வகையில், மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள், தமிழ்நாட்டு பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையம் எனப் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் தொடங்கும் இந்தப் புனிதப் பயணம், டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மண்டல பூஜையுடன் முக்கியமான கட்டத்தை எட்டுகிறது. இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை குறித்த முக்கியத் தகவல்களை விரிவாகப் பார்ப்போம்.

26
மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல - மகரவிளக்கு வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள்.

அந்த வகையில் 2026-ஆம் ஆண்டு மண்டல - மகரவிளக்கு சீசனுக்காக இன்று நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி இ.டி. பிரசாத் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து தீபம் ஏற்றினார். இதனைத் தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நவம்பர் 16: மாலை 5 மணிக்கு நடை திறப்பு

நவம்பர் 17: அதிகாலை 3 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம்

டிசம்பர் 27: மண்டல பூஜை

டிசம்பர் 30: மகரவிளக்கு வழிபாட்டுக்காக மீண்டும் நடை திறப்பு

ஜனவரி 14, 2027: மகரவிளக்கு திருவிழா

36
ஐயப்ப விரதத்தின் முக்கிய நடைமுறைகள்
  • குருசாமி அல்லது கோயில் குருக்கள் மூலம் துளசி அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம்.
  • கருப்பு, நீலம் அல்லது காவி நிற ஆடைகளை அணிவார்கள்.
  • தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து ஐயப்பனை வழிபடுவார்கள்.
  • சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு, மது மற்றும் புகைப்பழக்கங்களைத் தவிர்ப்பார்கள்.
  • கோபம், பொய், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்தி மனத் தூய்மையுடன் இருப்பார்கள்.
  • தினமும் ஐயப்பன் சரண கோஷம் எழுப்பி வழிபடுவார்கள்.
  • விரதத்தின் நிறைவாக இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்வார்கள்.

இந்த விரதத்தின் முக்கிய நோக்கம் உடல், மனம், எண்ணம் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி இறைவழிபாட்டில் ஈடுபடுவதாகும்.

46
நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

ண்டல காலத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அனைவரும் சிரமமின்றி தரிசனம் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

66,000 பக்தர்களுக்கு ஆன்லைன் விர்ச்சுவல் கியூ முன்பதிவு மூலம் அனுமதி. 14,000 பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதி. ஸ்பாட் புக்கிங் வசதி பம்பையில் கிடையாது. நிலக்கல், எருமேலி, வந்திப்பெரியார் சத்திரம் ஆகிய இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இடம் மற்றும் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை

  • நிலக்கல் - 10,000
  • எருமேல் - 2,000
  • வந்திப்பெரியார் சத்திரம் - 2,000
  • மொத்தம் - 14,000


ஆன்லைன் விர்ச்சுவல் கியூ முன்பதிவை இலவசமாக மேற்கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ முன்பதிவு இணையதளம்: Sabarimala Online Booking

பக்தர்கள் தங்களது பயணத் தேதியை முன்கூட்டியே திட்டமிட்டு தரிசன அனுமதிச் சீட்டை முன்பதிவு செய்துகொள்வது அவசியம்.

56
டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நிறைவு

ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் கடைப்பிடிக்கும் மண்டல விரதத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் மண்டல பூஜை நடைபெறுகிறது. 2026ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மண்டல பூஜை நடைபெற உள்ளது.

மண்டல பூஜையின் சிறப்புகள்

  • ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.
  • நெய்யபிஷேகம் முக்கிய வழிபாடாக நடைபெறும்.
  • ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.
  • பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி ஐயப்பனை வழிபடுவார்கள்.
  • மண்டல பூஜை என்பது 41 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான ஆன்மிக நிகழ்வாகும். இதனுடன் மண்டல கால வழிபாட்டின் முக்கியமான பகுதி நிறைவடைகிறது.
  • டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜைக்குப் பிறகு கோயில் நடை அடைக்கப்பட்டு, டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு கால வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்படும்.
66
24 மணி நேர உதவி மையம்

சபரிமலை செல்லும் தமிழ்நாட்டு பக்தர்களுக்கு 24 மணி நேர உதவி மையம்

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, களியக்காவிளை மற்றும் சபரிமலை ஆகிய மூன்று இடங்களில் இந்த உதவி மையங்கள் செயல்படும்.

குறிப்பாக, பயணத்தின்போது ஏற்படும் சந்தேகங்கள், உதவிகள் மற்றும் தேவையான தகவல்களைப் பக்தர்கள் இந்த மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

உதவி மையங்கள் மற்றும் தொடர்பு எண்கள்

சென்னை – இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம்

கட்டணமில்லா தொலைபேசி எண் - 1800 425 1757

களியக்காவிளை - தமிழ்நாடு - கேரள எல்லை

9894433179

8760668834

9486270443

சபரிமலை தகவல் மைய அலுவலர்கள் மற்றும் தொடர்பு எண்கள்

கேரள மாநிலம் சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தில் சுழற்சி முறையில் பணியாற்றும் அலுவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 17 - டிசம்பர் 2

ஆர். லட்சுமணன் - 70949 06442

எம். பிரேம்குமார் - 63858 06900

டிசம்பர் 3 - டிசம்பர் 17

வி. சிவகுமார் - 94439 94342

எஸ். சதீஷ்குமார் - 73588 39969

எம். சேர்மராஜா - 83440 21828

டிசம்பர் 18 - ஜனவரி 2

பி. செந்தில்குமார் - 70105 49951

கே. சஜீவன் - 99405 76898

சி. சந்தீப் குமார் - 85310 70571

ஜனவரி 3 - ஜனவரி 20

எச். வெங்கடேஷ் - 98433 70229

வி. ரமேஷ் - 84384 44770

சுதாகர் - 99425 05466

இந்தத் தகவல் மையங்கள் 2027 ஜனவரி 20ஆம் தேதி வரை செயல்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் அவசர உதவி மற்றும் பயணத் தகவல்களுக்கு இந்த எண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்

கார்த்திகை முதல் நாளில் தொடங்கும் ஐயப்பன் விரதம்

ஐயப்ப பக்தர்களுக்கு கார்த்திகை மாதம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தின் முதல் நாளான நாளை நவம்பர் 17ஆம் தேதி முதல் மண்டல கால விரதமும் யாத்திரையும் தொடங்குகின்றன.

சபரிமலையில் தினசரி நடை திறக்கும் நேரம் என்ன?

அதிகாலை நடை திறப்பு 3 மணி

நெய்யபிஷேகம் காலை 3.30 –- 11 மணி

மதிய நடை அடைப்பு மதியம் 1 மணி

மாலை நடை திறப்பு மாலை 3 மணி

இரவு நடை அடைப்பு இரவு 11 மணி

இரவு ஹரிவராசனம் பாடலுடன் நடை அடைக்கப்படும். கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்களுடைய தரிசன நேரத்திற்கேற்ப பயணத்தைத் திட்டமிட வேண்டும்.

மகரவிளக்கு திருவிழா எப்போது?

மண்டல பூஜையைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மற்றொரு முக்கிய நிகழ்வு மகரவிளக்கு திருவிழா.

2026-27ஆம் ஆண்டுக்கான முக்கிய தேதிகள்:

டிசம்பர் 27, 2026 - மண்டல பூஜை.

டிசம்பர் 30, 2026 -மகரவிளக்கு காலத்திற்காக நடை திறப்பு.

ஜனவரி 14, 2027 -மகரவிளக்கு திருவிழா.

ஜனவரி 19, 2027 -பக்தர்களுக்கான தரிசனத்தின் இறுதி நாள்.

ஜனவரி 20, 2027 - கோயில் நடை அடைப்பு.

Read more Photos on
click me!

Recommended Stories