உங்க வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக பீரோல இந்த நாணயங்களை வைச்சிக்கோங்க.. அப்புறம் காசுக்கு பஞ்சமே இருக்காது!

First Published | Jan 5, 2023, 4:21 PM IST

லட்சுமி தேவி, விநாயகர் உருவம் பொறித்த நாணயங்களை வீட்டில் வைத்திருப்பதால் பல நன்மைகள் ஏற்படும். 

இந்துக்களுக்கு சாஸ்திரங்களின் மீது அதிக நம்பிக்கை உண்டு. சகுனங்கள், பரிகாரங்கள் எல்லாவற்றையும் கவனமாக கடைபிடிப்பார்கள். நீங்களும் அந்த வகையாறா எனில் லட்சுமி காசு குறித்து நீங்கள் அறிவீர்கள். செல்வத்தின் ஆதிமூலம் குபேரலட்சுமிதான். லட்சுமியின் அனுக்கிரகம் இருந்தால் நிச்சயம் நீங்கள் வளமான வாழ்க்கையை வாழ முடியும். 

சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும் காசு கையில் சேராமல் அல்லல்படுவர். அவர்கள் தங்களுடைய பீரோவில் நிச்சயம் வெள்ளி காசுகளை வைத்திருப்பது நல்லது. அதிலும் லட்சுமி உருவம் பதித்த வெள்ளி நாணயம் வைத்தால் கூடுதல் நன்மை. வெள்ளி நாணயங்கள் லட்சுமிக்கு மட்டுமில்லை சுக்கிரனுக்கும் ஏற்றது. பணம், தங்கம் வைக்கும் இடத்தில் வெள்ளி காசுகளை வைத்தால் பணம் மேலும் பெருகும். 

Tap to resize

Lakshmi Narayan Raja Yoga

லட்சுமி, விநாயகர் உருவம் பதித்த வெள்ளி காசுகளை வைத்திருக்கும்போது சுக்கிரன் பார்வை கிடைக்கும். மூம்மூர்த்திகளின் ஆசியும் கிடைத்தால் பொருளாதார சிக்கல் வராது. சில வெள்ளி நாணயங்களில் லட்சுமி ஒரு பக்கமும், விநாயகர் மறுபக்கமும் இருப்பது போல தயார் செய்யப்பட்டிருக்கும். இருபக்கமும் ஒரே தெய்வம் இருப்பது போலவும் வெள்ளி காசுகள் கிடைக்கின்றன. 

வெள்ளி கிழமைகளில் லட்சுமி, விநாயகரின் உருவம் பதித்த வெள்ளி நாணயங்களை வீட்டுக்கு வாங்கி வரலாம். இதனை ஓடும் தண்ணீரில் தூய்மைப்படுத்த வேண்டும். பிறகு பூஜை அறையில் விநாயகர், லட்சுமி ஆகிய தெய்வங்களின் பார்வையில் வைத்து வழிபட வேண்டும். மாலை வழிபாட்டிற்கு பின்னர் அந்த நாணங்களை எடுத்துவிட்டு 25 பைசா அல்லது 50 பைசா (1 ரூபாய் போன்ற ஏழு சிறிய நாணங்கள்) வைக்க வேண்டும். வெள்ளி நாணயங்களை வடகிழக்கு திசையில் வைத்தால் அணுக்கமான நன்மை நடக்கும். அந்த 7 சின்ன காசுகளை தோட்டத்தில் கொண்டு போய் புதைக்க வேண்டும். அதையும் இரவில்தான் செய்ய வேண்டும். தோட்டம் இல்லாவிட்டால் பூந்தொட்டியில் வைக்கலாம். இந்த சடங்கை கவனமா செய்யுங்கள். 

இந்த சடங்கை செய்து முடித்த பிறகு பொருளாதாரத்தில் நீங்கள் முன்னேற்றம் கண்டால் அன்னதானம் செய்ய வேண்டும். ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு உதவி செய்யலாம். செல்வம் கிடைத்ததும் சிலர் தலைகால் புரியாமல் ஆடுவர். அவர்களுக்கு செல்வம் நிலைக்காது. பாதியில் போய்விடும். வீட்டை எப்போதும் சுத்தமாக வைப்பதில் கவனம் கொள்ளுங்கள். பகவத் கீதை வாசித்து மனதை தூய்மையாக வையுங்கள். உண்மையில் லட்சுமியை வழிபட்டு ஆசீர்வாதத்தைப் பெறுவது எளிமையான விஷயம். ஆனால் அதைப் பராமரிப்பது கடினம். கவனமாக செய்யுங்கள். 

Latest Videos

click me!