பிறந்தநாள் முதல் திருமணம் வரை எந்த ஒரு சிறிய நிகழ்ச்சிக்கும் பரிசு கொடுப்பது வழக்கம். சிறப்பு சந்தர்ப்பங்களில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் எந்த ஒரு பொருளும் விலை உயர்ந்ததாகவோ, கவர்ச்சியாகவோ இருந்தால், அதை பரிசாக கொடுப்பது நல்லதல்ல என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
வாஸ்து மற்றும் ஜோதிடத்தின் படி, சில வகையான பொருட்களை எந்த சூழ்நிலையிலும் பரிசாக கொடுக்கக்கூடாது. அந்த விஷயங்கள் என்ன? அவற்றைக் கொடுப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
மேலும் பலர் கைக்கடிகாரங்களை பரிசாக வழங்குகிறார்கள். ஆனால் இது அவ்வளவு நல்லதல்ல என்கின்றனர் வாஸ்து பண்டிதர்கள். குறிப்பாக சுவர் கடிகாரங்களை பரிசாக கொடுக்கவே கூடாது. இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, பரிசு கொடுத்தவர்களுக்கும், பெற்றவர்களுக்கும் சண்டை வர வாய்ப்பு உள்ளது என்கின்றனர் வாஸ்து பண்டிதர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஒருபோதும் பரிசாக வழங்கக்கூடாத பொருட்களில் பணப்பையும் ஒன்று. வாஸ்து பண்டிதர்கள், பணத்தை மறைத்து வைக்கும் பர்ஸ் போன்ற பொருட்களை கொடுப்பது, உங்களின் நேர்மறையான நிதி ஆற்றலைக் குறைக்கிறது, இதனால் பணம் உங்களுடன் தங்காது.
பலர் பேனா, ஸ்டேஷனரி போன்றவற்றை அன்பளிப்பாகத் தருகிறார்கள். ஆனால் இதுவும் நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இதுபோன்ற பொருட்களைப் பரிசாகக் கொடுப்பது, அவற்றைப் பெறுபவர்களுக்கு எதிர் விளைவுகளைத் தரும் என்று கூறப்படுகிறது.