அதாவது, காவல்துறை, தீயணைப்பு சேவைகள், மருத்துவ உதவிகள், வன அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான அவசர தொலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இது அவசர நேரங்களின் போது உடனடி சேவைகளை பக்தர்களுக்கு அளிக்கிறது. மேலும், இந்த “சுவாமி சாட்போட் - Swami Chatbot” வாயிலாக சபரிமலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கும் நேரங்கள், பூஜை நேரங்கள், அருகிலுள்ள கோயில்கள், தங்குமிடங்கள், உணவகங்கள், விமான நிலையம், ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகிய தகவல்களையும் கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழகப்
பேருந்துகள் வந்து செல்லும் நேரங்களையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.