Today Rasipalan 18th Jan 2023 | இன்றைய ராசிபலன்

Published : Jan 18, 2023, 05:30 AM IST

Today Rasipalan 18th Jan 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (18/01/ 2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Today Rasipalan 18th Jan 2023 | இன்றைய ராசிபலன்

மேஷ ராசி நேயர்களே... முதலீடு செய்ய சிறந்த நாள். ஆனால் அனுபவம் வாய்ந்த நபரின் வழிகாட்டுதலைப் பெறுவது நன்று. ஆன்மிக நடவடிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். ஒரு பொது இடத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம்
 

212

ரிஷப ராசி நேயர்களே... சில சவால்கள் வரலாம் ஆனால் அவற்றை முழு நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள் வெற்றி வசமாகும். பணம் தொடர்பான எந்த விதமான பரிவர்த்தனையையும் செய்யாதீர்கள். பிரச்சனைகளை நிதானமாக தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
 

312

மிதுன ராசி நேயர்களே... சில முக்கிய குடும்ப முடிவுகளை எடுக்க நேரிடும். தொழில் தொடர்பான தேர்வுகளில் சாதகமான முடிவுகளைப் பெறலாம். சில புதிய பொறுப்புகளால் வேலை அதிகரிக்கும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
 

412

கடக ராசி நேயர்களே... நிதி தொடர்பான திட்டமிடல் வெற்றி பெறும். எந்த எதிர்மறையான சூழ்நிலையையும் நிதானமாக எதிர்கொள்ளுங்கள். கோபமும் வெறுப்பும் நிலைமையை மோசமாக்கும்.
 

512

சிம்ம ராசி நேயர்களே... உங்கள் சிறப்புத் திறமையைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள் பண வரவுடன் செலவுகளும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் எந்தவொரு பயணத்தையும் தவிர்க்கவும். எதிர்மறை மற்றும் தவறான செயல்களில் இருந்து விலகி இருங்கள்.
 

612

கன்னி ராசி நேயர்களே... நண்பர்களுடன் குடும்பச் சந்திப்புகள் இருக்கும். பொழுதுபோக்குடனும் மகிழ்ச்சியாகவும் நேரம் கழியும். சகோதரர்களுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும்.
 

712

துலா ராசி நேயர்களே... நேரம் உங்களுக்கு சாதகமான மாற்றத்தை கொண்டு வரும். உணர்ச்சிவசப்பட்டு உங்களைப் பற்றிய முக்கியமான எதையும் யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள். வருமான ஆதாரங்கள் குறைவாக இருக்கும்.
 

812

விருச்சிக ராசி நேயர்களே... நாளின் ஆரம்பம் வெற்றிகரமாக இருக்கும். உங்கள் மனதில் ஒருவரைப் பற்றிய சந்தேக உணர்வு, நல்உறவைக் கெடுக்கும். எனவே, காலத்திற்கு ஏற்றவாறு நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவது அவசியம்.
 

912

தனுசு ராசி நேயர்களே... பணம் தொடர்பான முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வீர்கள். நாளின் தொடக்கத்திலிருந்தே உங்கள் முக்கியமான பணிகளைத் திட்டமிடத் தொடங்குங்கள். உங்கள் அவசரம் மற்றும் கவனக்குறைவால் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
 

1012

மகர ராசி நேயர்களே... கோவில் வழிபாடு மன அமைதியை தரும். இளைஞர்கள் எந்த ஒரு முக்கியமான முடிவை எடுக்கும்போதும் சரியான ஆலோசனை அவசியம். முழு ஆவணத்தைப் படிக்காமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து இட வேண்டாம்.
 

1112

கும்ப ராசி நேயர்களே... வீடு தொடர்பான முக்கியப் பொருட்களை வாங்குவீர்கள். இளைஞர்கள் தங்கள் இலக்கை நோக்கி கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் வரவு செலவு கணக்குகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
 

1212

மீன இன்றைய நாளுக்கான இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஒரு முக்கியமான பணியை முடிப்பது மன அமைதியை தரும். பணி அமைப்பில் மாற்றம் கொண்டு வருவது சாதகமாக இருக்கும்.
 

Read more Photos on
click me!

Recommended Stories