Today Rasipalan 02 Jan 2023 | இன்றைய ராசிபலன்

First Published Jan 2, 2023, 5:31 AM IST

Today Rasipalan 02 Jan 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (02/01/ 2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

மேஷம்:
முதலீடு செய்ய சிறந்த நாள். ஆனால் அனுபவம் வாய்ந்த நபரின் வழிகாட்டுதலைப் பெறுவது நன்று. ஆன்மிக நடவடிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். ஒரு பொது இடத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம்

ரிஷபம்:
சில சவால்கள் வரலாம் ஆனால் அவற்றை முழு நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள் வெற்றி வசமாகும். பணம் தொடர்பான எந்த விதமான பரிவர்த்தனையையும் செய்யாதீர்கள். பிரச்சனைகளை நிதானமாக தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

மிதுனம்:
சில முக்கிய குடும்ப முடிவுகளை எடுக்க நேரிடும். தொழில் தொடர்பான தேர்வுகளில் சாதகமான முடிவுகளைப் பெறலாம். சில புதிய பொறுப்புகளால் வேலை அதிகரிக்கும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

கடகம்;
நிதி தொடர்பான திட்டமிடல் வெற்றி பெறும். எந்த எதிர்மறையான சூழ்நிலையையும் நிதானமாக எதிர்கொள்ளுங்கள். கோபமும் வெறுப்பும் நிலைமையை மோசமாக்கும்.

சிம்மம்:
உங்கள் சிறப்புத் திறமையைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள் பண வரவுடன் செலவுகளும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் எந்தவொரு பயணத்தையும் தவிர்க்கவும். எதிர்மறை மற்றும் தவறான செயல்களில் இருந்து விலகி இருங்கள்.

கன்னி:
நண்பர்களுடன் குடும்பச் சந்திப்புகள் இருக்கும். பொழுதுபோக்குடனும் மகிழ்ச்சியாகவும் நேரம் கழியும். சகோதரர்களுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும்.
 

துலாம்:
நேரம் உங்களுக்கு சாதகமான மாற்றத்தை கொண்டு வரும். உணர்ச்சிவசப்பட்டு உங்களைப் பற்றிய முக்கியமான எதையும் யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள். வருமான ஆதாரங்கள் குறைவாக இருக்கும்.

விருச்சிகம்:
நாளின் ஆரம்பம் வெற்றிகரமாக இருக்கும். உங்கள் மனதில் ஒருவரைப் பற்றிய சந்தேக உணர்வு, நல்உறவைக் கெடுக்கும். எனவே, காலத்திற்கு ஏற்றவாறு நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவது அவசியம்.

தனுசு:
பணம் தொடர்பான முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வீர்கள். நாளின் தொடக்கத்திலிருந்தே உங்கள் முக்கியமான பணிகளைத் திட்டமிடத் தொடங்குங்கள். உங்கள் அவசரம் மற்றும் கவனக்குறைவால் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மகரம்:
கோவில் வழிபாடு மன அமைதியை தரும். இளைஞர்கள் எந்த ஒரு முக்கியமான முடிவை எடுக்கும்போதும் சரியான ஆலோசனை அவசியம். முழு ஆவணத்தைப் படிக்காமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து இட வேண்டாம்.

கும்பம்:
வீடு தொடர்பான முக்கியப் பொருட்களை வாங்குவீர்கள். இளைஞர்கள் தங்கள் இலக்கை நோக்கி கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் வரவு செலவு கணக்குகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

மீனம்:
இன்றைய நாளுக்கான இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஒரு முக்கியமான பணியை முடிப்பது மன அமைதியை தரும். பணி அமைப்பில் மாற்றம் கொண்டு வருவது சாதகமாக இருக்கும்.

click me!