December 2nd - இன்றைய ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு இன்று என்ன பலன்!

Published : Dec 02, 2022, 05:30 AM IST

Horoscope Today- Indriya Rasipalan December 2nd 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (02/12/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
December 2nd - இன்றைய ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு இன்று என்ன பலன்!

மேஷம்:
குழந்தையின் கல்வி மற்றும் தொழில் தொடர்பான சில திட்டங்கள் வெற்றியடையும். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பண பரிவர்த்தனைகளை கவனமாக செய்யுங்கள். மற்றவர்கள் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள். சில புதிய வேலைகள் தொடங்க நல்ல வாய்ப்பு.
 

212

ரிஷபம்:
விசேஷமானவர்களை சந்திப்பீர்கள். உங்கள் நீண்டநாள் பிரச்சனை தீரும். சொத்து தொடர்பான திட்டங்கள் கைகூடும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். சரியான நேரம் வரும்போது நிச்சயம் வெற்றி கிடைக்கும். பணிகள் தடைபடலாம்.
 

312

மிதுனம்:
அரசியல் தொடர்புகளால் நன்மைகள் ஏற்படக்கூடும். எனவே மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துங்கள். சமூகத்திலும் உறவுகள் மத்தியிலும் உங்களுக்கு சிறப்பான இடம் கிடைக்கும். பழைய எதிர்மறை விஷயங்கள் நிகழ்காலத்தைப் பாதிக்க விடாதீர்கள். அந்நியரை சந்திக்கும் போது கவனமாக இருங்கள். இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும்.
 

412

கடகம்:
குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளில் அதிகம் தலையிட வேண்டாம். இதனால் அவர்கள் மனம் புண்படலாம். சகோதரர்களுடன் இனிமையான உறவைப் பேணுங்கள். பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இது பணிச்சுமையை குறைக்கும்.
 

512

சிம்மம்:
உங்கள் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் சரியான பலன் கிடைக்கும். விரைவான வெற்றியைத் தேடி உங்கள் மனம் சில எதிர்மறையான செயல்களுக்குத் திரும்பும். எனவே பொறுமையாக இருங்கள். சில நேரங்களில் குறைந்த மன உறுதி உங்கள் திட்டங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம். அலுவக்கத்தில் பதவி உயர்வுக்கு வாய்ப்புண்டு.
 

612

கன்னி:
இந்த நேரத்தில் பல வகையான லாபம் மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நடைபெறலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் நிம்மதியாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம். அது தன்னம்பிக்கையை குறைக்கலாம். கோபம் மற்றும் அவசரம் நிலைமையை மோசமாக்கும்.
 

712

துலாம்:
இன்று, புதிய சாதனைகளைக் கொண்டுவரும் நாள். அதிக வேலை காரணமாக சில கோபம் மற்றும் எரிச்சல் உண்டாகலாம். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். மேலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் வெளியாட்கள் யாரும் தலையிட அனுமதிக்காதீர்கள்.
 

812

விருச்சிகம்:
கடந்த சில நாட்களாக நீங்கள் செய்து வந்த வேலைகளுக்கு இன்று எதிர்பார்த்ததை விட நல்ல பலன் கிடைக்கும். புதிய பொருள் அல்லது நகை வாங்கும் திட்டமும் இருக்கும். ஆனால் கற்பனையில் திட்டங்களை வகுத்து யதார்த்தத்தில் செயல்படுத்த வேண்டாம். குழந்தைகளின் பிரச்சனைகளை கவனமாக புரிந்து கொண்டு அவற்றை தீர்க்க முயற்சி செய்யுங்கள். இது அவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டும்.
 

912

தனுசு:
வீடு மாற்றம் அல்லது பராமரிப்பு தொடர்பான திட்டங்கள் வெற்றியடையும். உறவினரிடமிருந்து உங்களுக்குப் பிடித்தமான பொருளைப் பரிசாகப் பெறலாம். மதியத்திற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறலாம். பொறுமையாய் இருங்கள். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம்.
 

1012

மகரம்:
கிடப்பில் போட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க இது சரியான நேரம். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பயன்படுத்துங்கள். யாருக்கும் தேவையற்ற அறிவுரைகளை வழங்காதீர்கள் மற்றும் பிறர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். இல்லையெனில் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.
 

1112

கும்பம்:
குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான செயல்கள் திட்டமிடப்படும். நிலம் வாங்குவது தொடர்பான பணிகள் முன்னேற்றம் அடையும். ஒரு சாதாரண விஷயத்தால் உறவினர்களுடன் தகராறு ஏற்படலாம். எனவே பேசும் போது அவதூறாக பேசாதீர்கள். அந்த நேரத்தை பொறுமையுடனும் நிதானத்துடனும் கடந்து செல்லுங்கள்.
 

1212

மீனம்:
பெண்கள் தங்கள் வேலையை எளிதாக முடிப்பதோடு, தனிப்பட்ட பணிகளிலும் கவனம் செலுத்துவார்கள். பெற்றோரின் உடல்நிலையில் கவலை ஏற்படலாம். உங்கள் ஆசைகளை நிறைவேற்ற அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். .
 

Read more Photos on
click me!

Recommended Stories