இந்த பாத்திரங்களை இந்த திசையில் வையுங்கள்: உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் செம்பு, பித்தளை பாத்திரங்களை வாஸ்துபடி, மேற்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் தங்கி உங்களுக்கு அருள் புரிவார்.
இந்த செடிகளை சமையலறையில் வையுங்கள்: உங்கள் வீட்டு சமையலறையில் கற்றாழை, துளசி போன்ற சில செடிகளை வைக்கலாம். இது உங்களின் நிதி நிலைமையை வலுவாக வைத்திருக்க பெரிதும் உதவும்.
இந்த மசாலாப் பொருள் எப்போதும் இருக்க வேண்டும்: மஞ்சள், சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மசாலாப் பொருள் ஆகும். இந்து மதத்தில் இதற்கு முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக இது மதச் சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், சமையலறையில் இதை ஒருபோதும் காலியாக வைக்க கூடாது. எப்போதுமே இருக்க வேண்டும். இதனால் உங்கள் வீட்டில் பணத்திற்கு எப்போதுமே தட்டுப்பாடு வராது.
இதையும் படிங்க: சமையலறையில் 'இந்த' பொருட்களை காலியாக வைக்காதீங்க..பண பற்றாக்குறை வரும்!
கழிப்பறை வைக்காதீர்: வாஸ்து சாஸ்திரம் படி, உங்கள் வீட்டு சமையல் அறைக்கு அருகில் கழிப்பறையை ஒருபோதும் வைக்காதீர்கள். இதனால் எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டில் உருவாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D