Chanakya Niti: திருமண வாழ்க்கையில கணவன்-மனைவிக்கு இடையிலான வயசு வித்தியாசம் ரொம்ப முக்கியம்னு சாணக்கிய நீதி சொல்லுது. சரியான வயசு வித்தியாசம் பத்தி சாணக்கியர் சொன்ன ஆலோசனைகள் பற்றி இங்கு காணலாம்.
chanakya niti explains the ideal age difference between husband and wife
இந்திய சமூகத்துல கல்யாணம்னு பேச்செடுத்தா, முதல்ல வயசைத்தான் கேப்பாங்க. ஆனா, பையனோட வயசை பெருசா கண்டுக்க மாட்டாங்க. அவன் ஒரு வயசு மூத்தவனா இருந்தாலும் சரி, பத்து வயசு மூத்தவனா இருந்தாலும் சரி, யாரும் அதைப் பத்தி பேசமாட்டாங்க. இந்தச் சூழல்ல, ஆச்சார்ய சாணக்கியர் தனது நீதியில, கணவன்-மனைவிக்கு இடையிலான சரியான வயசு வித்தியாசத்தை விளக்கியிருக்கார்.
சாணக்கிய நீதிபடி கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்?
திருமண வாழ்க்கைக்கு அவரோட கருத்துக்கள் இன்னைக்கும் ஒரு வழிகாட்டியா இருக்கு. சரியான வயசு வித்தியாசம், உறவுக்கு முதிர்ச்சியைக் கொடுக்கும், பரஸ்பர புரிதல், மரியாதை, பொறுமையை அதிகரிக்கும்னு அவர் நம்பினார். வயசு வித்தியாசம் சமமா இருக்கும்போது, வாழ்க்கை இலக்குகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் பொருந்திப் போகும். இதனால சண்டை சச்சரவு குறைஞ்சு, விவாகரத்து போன்ற சூழல்களைத் தவிர்க்கலாம்.
கணவன்-மனைவிக்கு இடையில வயசு வித்தியாசம் எவ்வளவு கம்மியா இருக்கோ, அந்த அளவுக்கு அவங்களுக்குள்ள புரிதல் அதிகமாகும்னு சாணக்கியர் சொல்றார். புரிதல் அதிமாக இருக்கும் போது அவங்க ஒண்ணா சேர்ந்து தப்புகளை சரி பண்ணுவாங்க, சந்தோஷமா வாழ்வாங்க, குடும்ப வாழ்க்கையோட நுணுக்கங்களை ஒண்ணாவே கத்துக்குவாங்க. அதனால, கல்யாணம் பண்ணும்போது வயசு வித்தியாசத்தை கண்டிப்பா யோசிக்கணும்.
வயசான ஆண், ரொம்ப இளமையான பெண்ணை கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சாணக்கியர் அறிவுறுத்துறார். ஏன்னா, அந்தத் திருமணம் அதிக நாள் நீடிக்காதாம். பெரிய வயசு வித்தியாசம் தம்பதிகளுக்குள்ள நல்ல புரிதலை உருவாக்காது. இதனால, சரியான திருமண வாழ்க்கை அமையாது. இந்திய சமூகத்துல, பாரம்பரியமா 3-5 வருஷ வயசு வித்தியாசத்தை ஏத்துக்கிறாங்க. கணவனை விட மனைவி இளையவரா இருக்கிறதுதான் வழக்கம். ஆனா, சில சமயம் இந்த வித்தியாசம் 10-ல இருந்து 15 வருஷம் வரைக்கும் கூடப் போகுது.
இன்னைக்கும் இந்தியாவுல பல குடும்பங்கள்ல, கணவனை விட மனைவி வயசுல சின்னவங்களாத்தான் இருக்காங்க. அதாவது, மணமகன் வயசை விட மணமகள் வயசு கம்மியா இருக்கணும்னு நினைக்கிறாங்க. மாப்பிள்ளைக்கு 30 வயசுன்னா, பொண்ணுக்கு 30-க்கு கீழ இருக்கணும்னு பலரும் நம்புறாங்க. முன்னாடி, இந்த வயசு வித்தியாசம் 6-8 வருஷமா இருந்துச்சு, ஆனா இப்போ படிப்படியா குறைஞ்சிட்டு வருது. அறிவியல்படி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல்ல ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும்போது, அவங்க உடலுறவுக்குத் தகுதியானவங்களா ஆகுறாங்க.
66
திருமணத்துக்கு குறைந்தபட்ச வயது
பொதுவா, பொண்ணுங்களுக்கு 13 வயசுல இந்த ஹார்மோன் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். பசங்களுக்கு, 9-ல இருந்து 15 வயசுக்குள்ள இது நடக்கும். அதாவது, பசங்களை விட பொண்ணுங்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் சீக்கிரமே நடக்குது. இதனால, அவங்க பசங்களை விட சின்ன வயசுலயே உடலுறவுக்குத் தகுதி பெறுறாங்க. ஆனா, இந்த ஹார்மோன் மாற்றத்தால சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கணும்னு அர்த்தம் இல்ல. உலகத்துல பல நாடுகள்ல திருமணத்துக்கு குறைந்தபட்ச வயது 16-ல இருந்து 18 வரை இருக்கு. நம்ம நாட்டுல, பொண்ணுக்கு 18 வயசும், பையனுக்கு 21 வயசும் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதா நிர்ணயிச்சிருக்காங்க.