தோஷங்களைப் போக்கி வீட்டில் அமைதியைக் கொண்டுவரும் கற்பூர வழிபாடு!

First Published | Jan 9, 2024, 10:06 PM IST

தினமும் பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பது கற்பூரம். கற்பூரத்தை வைத்து இறைவனை வழிபாடு செய்வது தோஷங்களை நீக்கி, வீட்டில் அமைதியை நிலவச் செய்யும். மாலை நேரத்தில் 6 பொருட்களை கற்பூரத்துடன் சேர்த்து வழிபடுவது நல்லது என்று நம்பப்படுகிறது.

வாசனை இலைகள்

கற்பூரத்துடன் வாசனை இலைகளை சேர்த்து எரித்து மங்களகரமானது என்று நம்பப்படுகிறது. இந்த வாசனை நேர்மறை சக்தியை வீட்டிற்குக் கொண்டுவரும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையை கற்பூரத்துடன் சேர்த்து ஏற்றி வழிபாடு செய்தால் செவ்வாய் மற்றும் சுக்கிரன் மூலம் அதிர்ஷ்டம் கிட்டும். வீட்டில் பற்றாக்குறைகளைப் போக்கி செழிப்பைக் ஏற்படுத்தும்.

Tap to resize

ஏலக்காய்

ஏலக்காயை கற்பூரம் சேர்த்து ஏற்றலாம். அதிலிருந்து வரும் புகை வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டி நல்ல எண்ணங்களைகக் விளைவிக்கும்.

கிராம்பு

கிராம்புகளை கற்பூரத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். ஜோதிடத்தில் கிராம்பின் பலன் மிகவும் அதிகமாகச் சொல்லப்படுகிறது.

கருமிளகு

கற்பூர ஆரத்தியில் கருமிளகையும் சேர்த்துக்கொண்டு வழிபடலாம். இதன் மூலம் சனி பகவான் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

வறுத்த கடுகு

கருப்பு கடுகை கற்பூரத்துடன் சேர்த்து ஏற்றலாம். இதன் மூலம் வீட்டில் மீது இருக்கும் திருஷ்டி கழிந்து வீட்டுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

Latest Videos

click me!