வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில பொருட்களை சரியான இடத்தில் வைப்பது அவசியம். குறிப்பாக, படுக்கையறையில் சில பொருட்களை மறந்தும் வைக்கக்கூடாது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட பொருட்கள் எவை என்று இங்கே பார்க்கலாம்.
நம் வீட்டில் உள்ள பொருட்களை சரியான இடத்தில் வைக்கவில்லை என்றால், அது நமக்கே தெரியாமல் நம் மனநிலையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என வாஸ்து கூறுகிறது. இதைதான் பெரியோர்கள் வைக்க வேண்டியதை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கனும் அப்படின் சொல்லியுள்ளார்கள். எந்தவொரு பொருளையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் அது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.
26
படுக்கையறையில் சில பொருட்களை மறந்தும் வைக்கக்கூடாது
வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு பொருளையும் அதனதன் சரியான இடத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக, படுக்கையறையில் சில பொருட்களை மறந்தும் வைக்கக்கூடாது. அவை என்னென்ன என்று பார்ப்போம்.
36
கடவுள் சிலைகள் - மன கசப்பு வருமாம்
கடவுள் சிலைகளை எப்போதும் பூஜை அறையில்தான் வைக்க வேண்டும். படுக்கையறையில் வைத்தால், அது மனத்தில் ஒருவித பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். இந்த டென்ஷன் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பை உண்டாக்கலாம்.
படுக்கையறையில் தானியங்கள் போன்ற உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது, திருமண உறவில் பெரிய விரிசலையும் சிக்கலையும் உருவாக்கும். மேலும், இது பூச்சிகள் மற்றும் கிருமிகளை ஈர்த்து, நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
56
படுக்கைக்கு எதிரே கண்ணாடி
படுக்கையறையில் நம் கட்டிலைப் பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடியை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது மன அழுத்தத்தையும், மன அமைதியின்மையையும் ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது.
66
நெகட்டிவ் எனர்ஜி காணாமல் போகும்
வாஸ்து என்பது சரியான பொருட்களை சரியான இடங்களில் வைப்பதுதான். இதை நாம் சரியாகப் பின்பற்றினால், நம் வீடுகளில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி மற்றும் குழப்பங்கள் நீங்குவதை நிச்சயமாகப் பார்க்கலாம்.