மகர ராசியில் ஆதித்யா மங்கள யோகம் : இந்த 3 ராசிகளுக்கு அபரிதமான அதிர்ஷ்டம்!! இதுல உங்க ராசி இருக்கா..?

First Published | Feb 6, 2024, 10:50 AM IST

செவ்வாய் மகர ராசிக்கு நுழைந்துள்ளது. சூரியனுடன் இணைந்து அபூர்வ ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. இது சிலரது வாழ்க்கையை மாற்றப் போகிறது.

ஜோதிடத்தில் செவ்வாய் தைரியத்தின் அதிபதியாகக் கருதப்படுகிறார். இந்நிலையில், பிப்ரவரி 05 ஆம் தேதி செவ்வாய் மகர ராசிக்குள் நுழைந்தது.
சூரிய பகவான் ஏற்கனவே இதே ராசியில் இருக்கிறார். மகர ராசியில் சூரியனும் செவ்வாயும் இணைவதால் ஆதித்ய மங்கள் யோகம் ஏற்படப் போகிறது. எனவே, 3 ராசிக்காரர்களுக்கும் இது பலன் தரும் என்கின்றனர் ஜோதிடர்கள். அந்த ராசிகள் என்னவென்று பார்ப்போம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் 10ம் வீட்டில் உள்ளது. ஆதித்யா மங்கல யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் சம்பந்தமான நல்ல செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பாராத பதவி உயர்வு வரும். உங்கள் வருமானம் அபரிதமாக உயரும். உங்கள் நிதிநிலை மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  படிப்பில் இந்த 5 ராசிக்காரர்கள் தான் டாப் லெவல்.. உங்க ராசி இருக்கா..? செக் பண்ணுங்க..

Tap to resize

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் 2 ஆம் வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் தனுசு ராசியினரின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றும். பணியாளர்கள் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காண்பர்கள். இந்த ராசியை சேர்ந்த சிலருக்கு எதிர்பாராத பண லாபம் கிடைக்கும். அவர்களின் தைரியம் அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அதுபோல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இதையும் படிங்க:  இந்த 4 ராசிக்காரங்க கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. காதல்ல அம்புட்டு விசுவாசம் வச்சி இருப்பாங்க..!

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம்  7 ஆம் வீட்டில் உருவாகியுள்ளது. செவ்வாய் மற்றும் சூரியன் இணைவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது நல்ல நேரம்.. உங்கள் தொழிலில் வளர்ச்சி இருக்கும் உத்தியோகத்தில் உயர்ந்த உச்சங்களை அடைவீர்கள். இந்த யோகத்தில் புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பணியாளர்களுக்கு பதிவு உயர்வு கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!