தீபத்துக்கு தி.மலைக்கு போறீங்களா? கூட்ட நெரிசல் இல்லாமல் குளு குளுனு செல்ல போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!

First Published | Nov 21, 2023, 7:39 AM IST

திருவண்ணாமலை தீபத் திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏ.சி படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற தீப திருநாள் 26/11/2023 அன்றும் மற்றும் 27/11/2023 அன்று பௌர்ணமி தினமானதாலும் தீபத்தை காணவும் மற்றும் கிரிவலம் செல்லவும் பல லட்சம் பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக திருவண்ணாமலைக்கு தன் சொந்த வாகனங்களில் செல்லும் போது அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது இதனை தவிர்க்கும் பொருட்டு சொகுசாக பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் வருகின்ற 25/11/2023 (சனி) 26/11/2023 (ஞாயிறு) 27/11/2023(திங்கள்) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு ஐம்பது எண்ணிக்கையிலான குளிர் சாதனமுள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இப்பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D


மேலும் திருநெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலை சென்று வர சிறப்பு பேருந்துகள் 24/11/2023 முதல் 26/11/2023 வரை இயக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க;- கார்த்திகை தீப திருவிழா; திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்து அதிகாரி தகவல்

எனவே பக்தர்கள் www.tnstc.in மற்றும் tnstc mobile app-மூலம் முன்பதிவு செய்து தங்கள் பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!