Octopus Facts: மனிதர்கள், விலங்குகள்னு எல்லாத்துக்கும் ஒரு இதயம், ஒரு மூளைதான் இருக்கும். ஆனா, ஒரு உயிரினத்துக்கு மட்டும் 3 இதயமும் 9 மூளைகளும் இருக்கு. அது எந்த உயிரினம், அதன் உடல் அமைப்பு எப்படிப்பட்டதுனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ஆக்டோபஸின் உடல் அமைப்பு ரொம்பவே விசித்திரமானது. அதுக்கு 3 இதயம், 9 மூளை இருக்குறது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனா, மனிதர்களைப் போல 9 முழுமையான மூளைகள் அதுக்கு இல்லை. அதோட நரம்பு மண்டல அமைப்புதான் இந்த சிறப்புக்குக் காரணம்.
25
மூன்று இதயங்கள் எதற்கு?
ஆக்டோபஸுக்கு மொத்தம் மூணு இதயம். இதுல ரெண்டு இதயங்கள், செவுள்களுக்கு (Gills) ரத்தத்தை அனுப்பி ஆக்சிஜனைப் பெறுது. மூணாவது இதயம், அந்த ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை உடல் முழுக்கப் பம்ப் பண்ணுது. ஆக்டோபஸ் நீந்தும்போது, அதோட பிரதான இதயத் துடிப்பு குறையும். அதனாலதான் அது பெரும்பாலும் கடல்தரையில ஊர்ந்து போகுது.
35
9 மூளைகளின் செயல்பாடு!
ஆக்டோபஸுக்கு ஒரு பிரதான மூளை இருக்கு. மீதி எட்டு 'மினி மூளைகளும்' அதோட கரங்கள்ல இருக்கு. இந்த கரங்கள்ல இருக்குற மூளைகள், பிரதான மூளையோட உதவி இல்லாமலேயே தனித்துச் செயல்படும் திறன் கொண்டவை. இதனால, ஒரு கரம் உணவைத் தேடும்போது, இன்னொரு கரம் ஒரு கல்லைப் பிடிக்க முடியும்.
ஆக்டோபஸோட மொத்த நியூரான்கள்ல சுமார் மூன்றில் இரண்டு பங்கு, அதோட கரங்கள்லதான் இருக்கு. இதனால ஒவ்வொரு கரமும் தொடு உணர்வை அறிஞ்சுக்கவும், பொருட்களைப் பரிசோதிக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும் உதவுது. இதை விஞ்ஞானிகள் 'பரவலாக்கப்பட்ட நுண்ணறிவு' (Distributed Intelligence) அப்படின்னு சொல்றாங்க.
55
எதிரிகளிடமிருந்து தப்பிக்க!
இந்த சிறப்பு அமைப்புனால, ஆக்டோபஸ் சுலபமா வேட்டையாடுது, எதிரிகள்கிட்ட இருந்து தப்பிக்குது. சின்ன ஓட்டைகள் வழியாக்கூட புகுந்து வெளியே வருது. பாட்டில் மூடியைத் திறப்பது போன்ற கடினமான வேலைகளைக்கூட அசால்ட்டா செய்யுது. இதனாலதான், இது உலகின் புத்திசாலித்தனமான முதுகெலும்பில்லாத (Invertebrate) உயிரினம்னு பெயர் எடுத்திருக்கு.