நோ கூட்டணி; சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?

Published : Mar 17, 2026, 03:50 PM IST

தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் சோலோவாக தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
TVK Contest TN Elections Alone

நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கினார். அவர் கட்சி தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. அக்கட்சியால் தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம். விஜய்யின் அரசியல் வருகையால் திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறையும் சூழல் உருவாகி உள்ளது. கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதையே பிரதிபலிக்கின்றன. இந்த தேர்தலில் தவெக கட்சி பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பரவலாக பேச்சு அடிபட்டு வந்தது. விரைவில் அறிவிப்பு வரும் என்றும் கூறப்பட்டது.

24
விஜய் போட்டியிடும் தொகுதி எது?

ஆனால் தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் தகவலின் படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து தான் போட்டியிட உள்ளதாம். அதனால் யார்... யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்கிற உத்தேச பட்டியலும் வெளியாகி உள்ளது. அதன்படி அக்கட்சியின் தலைவர் விஜய், மொத்தம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு தொகுதியாக பெரம்பூர் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் போட்டியிட உள்ள மற்றொரு தொகுதி என்ன என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.

34
சென்னையில் இறங்கும் தவெக படை

அதேபோல் தவெகவில் உள்ள மற்றும் சில பிரபலங்கள் போட்டியிடும் தொகுதி குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சென்னை தி நகர் தொகுதியில் போட்டியிட உள்ளாராம். அதேபோல் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் பொருளாளர் வெங்கட்ராமன் மயிலாப்பூரிலும், தவெகவில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ஜேசிடி பிரபாகர், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாம். அதேபோல் ஆர்.கே.நகரில் மரிய வில்சன் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

44
தட்டிதூக்குமா தவெக?

சென்னை, திமுகவின் கோட்டையாக இருந்து வரும் நிலையில், அதை தகர்த்தெறிவதற்காக பலம் வாய்ந்தவர்களை விஜய் களமிறக்கி உள்ளாராம். தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அப்போது பதிவாகும் வாக்குகள் மே மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் தெரிந்துவிடும் TVK-வின் அரசியல் எதிர்காலம். இந்த தேர்தலில் TVK-வுக்கும், திமுகவுக்கும் தான் போட்டியே என விஜய் ஒவ்வொரு மேடைகளிலும் சொல்கிறார். அவர் லிஸ்ட்டிலேயே சேர்க்காத அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் என்ன செய்யப்போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories