DMK NDA Alliance : சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ், விஜய்யின் கட்சியுடன் இணைந்ததால், திமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைவது குறித்து பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. நீண்ட கால கூட்டணியாக இருந்த காங்கிரஸ், நடிகரும், முதல்வருமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் இணைந்தது மாநில அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியது. இதன் பின்னணியில், தோல்வியை சந்தித்த திமுக தனது அடுத்த அரசியல் நகர்வுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
25
பாஜக கூட்டணிக்கு திமுக செல்லுமா?
அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின்படி, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது திமுகவின் ஆதரவை பெற முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக திமுகவின் 22 மக்களவை எம்.பி.க்கள் மற்றும் 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீது தேசிய ஜனநாயக கூட்டணி கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மையை உறுதி செய்ய இந்த ஆதரவை முக்கியமாக பார்க்க வேண்டும் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
35
காங்கிரஸுடன் உறவு முறிவு
காங்கிரஸுடன் ஏற்பட்டுள்ள உறவு முறிவு தற்போது வெளிப்படையாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களவையில் காங்கிரஸிலிருந்து தனி இருக்கை ஒதுக்க வேண்டும் என்று திமுக சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருப்பது முக்கியமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால், தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகள் குறித்து பல்வேறு விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஆனால் திமுக நேரடியாக என்டிஏவில் இணைவதற்கு “சனாதனம்” விவகாரம் பெரிய சவாலாக இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் முன்பு சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்தை பாஜக கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
55
திமுக குறித்து டெல்லியில் பரபரப்பு
இதனால் திமுகவை முழுமையாக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சட்ட மசோதாக்கள் அல்லது வாக்கெடுப்புகளில் வெளிப்புற ஆதரவைப் பெறும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கூட்டணியில் இருந்த திமுக, மீண்டும் அந்த அணிக்குள் வருமா? என்ற கேள்வி தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.