லேசுல எடை போட வேண்டாம்! 50 தொகுதிகளை பதம் பார்க்கும்! ராமதாஸ் - சசிகலா கூட்டணி குறித்த 'பகீர்' சர்வே!

Published : Mar 21, 2026, 12:21 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் வி.கே. சசிகலா இணைந்து புதிய மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணி, 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக, அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
17
திருபத்திற்கு மேல் திருப்பம்

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே. சசிகலா ஆகியோர் கரங்கோர்த்துள்ளனர். தைலாபுரத்தில் நடந்த இந்த சந்திப்பு, வெறும் சந்திப்பாக இல்லாமல், 'அதிமுக - திமுக' ஆகிய இரு பெரும் துருவங்களையும் அதிர வைக்கும் ஒரு மெகா கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

27
வடக்கும் தெற்கும் இணையும் 'மெகா' வாக்கு வங்கி

இந்தக் கூட்டணியின் பலம் என்பது வெறும் எண்கள் சார்ந்தது மட்டுமல்ல; அது சமூக ரீதியான ஒரு மாபெரும் சக்தியாகப் பார்க்கப்படுகிறது.

வன்னியர் + முக்குலத்தோர் வாக்குகள்

விழுப்புரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாமகவின் வன்னியர் வாக்கு வங்கியும்; தஞ்சை, திருவாரூர், தேனி, மதுரை உள்ளிட்ட தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சசிகலாவின் முக்குலத்தோர் சமூக ஆதரவும் இணைவது ஒரு 'வெடிமருந்து' கலவையாகப் பார்க்கப்படுகிறது.

37
50 தொகுதிகளில் கடும் சவால்

அரசியல் நோக்கர்களின் முதற்கட்ட கணிப்பின்படி, இந்த இரு சமூக வாக்குகள் சரிசமமாக உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வின் வெற்றி வாய்ப்பை இந்தக் கூட்டணி 'பதம் பார்க்கும்' எனத் தெரிகிறது.

47
அதிமுக-வுக்கு விழும் நேரடி அடி?

சசிகலாவின் புதிய கட்சியான "அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" (AIPTMMK), குறிப்பாக அதிமுக-வின் வாக்கு வங்கியில் பெரும் பிளவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

"இந்தத் தர்ம யுத்தம் துரோகிகளை வீழ்த்தவும், தொண்டர்களை ஒன்றிணைக்கவும் தொடங்கப்பட்டுள்ளது" - வி.கே. சசிகலா.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வுக்குச் செல்ல வேண்டிய தென் மாவட்ட வாக்குகள் சிதறுவது, மறைமுகமாக மற்ற கட்சிகளுக்குச் சாதகமாக அமையலாம். அதேபோல், பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை-மகன் (ராமதாஸ் - அன்புமணி) பிளவுக்கு மத்தியில், ராமதாஸின் இந்த அதிரடி முடிவு வட மாவட்ட அரசியல் கணக்குகளை மாற்றியமைத்துள்ளது.

57
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) சாதகமா?

இந்த மும்முனை அல்லது நான்முனைப் போட்டியில், வாக்குகள் சிதறுவது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு மிகப்பெரிய 'அட்வான்டேஜ்' ஆக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் மீதும் அதிருப்தியில் இருக்கும் நடுநிலை வாக்குகளை விஜய் ஈர்க்கும் பட்சத்தில், ராமதாஸ்-சசிகலா கூட்டணி பிரிக்கும் வாக்குகள் பிரதான கட்சிகளின் வெற்றியைத் தடுத்து, விஜய்யின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

67
இது வெரும் மூன்றாவது அணி அல்ல

ராமதாஸ் - சசிகலா கூட்டணி என்பது வெறும் 'மூன்றாவது அணி'யாக மட்டும் இல்லாமல், தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் 'கிங் மேக்கர்' இடத்தைப் பிடிக்கத் துடிக்கிறது. குறிப்பாக 50 தொகுதிகளில் இவர்கள் காட்டப்போகும் அதிரடி, மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

77
தென்னந்தோப்பில் வீசும் புயல்

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் வி.கே. சசிகலாவின் ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ (AIPTMMK) இணைந்து அமைத்துள்ள இந்த மெகா கூட்டணி, 2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு ‘மல்டி கார்னர்’ போட்டியாக மாற்றியுள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில் பாமகவுக்கு இருக்கும் வன்னியர் சமூக வாக்கு வங்கியும், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சசிகலாவுக்கு இருக்கும் முக்குலத்தோர் சமூக ஆதரவும் கைகோர்ப்பது, தமிழகத்தின் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வின் வெற்றி வாய்ப்புகளைப் பலமாகப் பதம் பார்க்கும் எனக் கணிக்கப்படுகிறது. 

இது ஒருபுறம் அதிமுக-வின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டாலும், மறுபுறம் வாக்குகள் சிதறுவது விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், ஏப்ரல் 23-ல் நடைபெறவுள்ள இந்தப் போரில் 'தென்னந்தோப்பு' மற்றும் 'மாம்பழம்' சின்னங்கள் காட்டும் அதிரடி, திராவிடக் கட்சிகளின் கோட்டைகளைத் தகர்த்து ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories