ஏசி ரூம் அரசியலா..? எளிய மக்கள் அரசியலா..? தென் மாவட்ட பாசப்போராட்டத்தில் சறுக்கும் இபிஎஸ்..!

Published : Mar 19, 2026, 02:37 PM IST

விளாத்திகுளம் மாணவி பாலியல் பலாதாரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க எடப்பாடி நேரில் வர வேண்டும் என தென் மாவட்ட தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

PREV
14
தென் மாவட்டங்களில் அதிமுகவின் சறுக்கல்

தமிழக அரசியலின் அச்சாணியாக ஒரு காலத்தில் கருதப்பட்ட தென் மாவட்டங்களில், தற்போது அதிமுகவின் கோட்டை சரிந்து வருகிறதோ என்ற அச்சம் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையாண்ட விதம், தென் மாவட்ட நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

24
களத்தை கவனிக்கத் தவறிய எடப்பாடி

தென் மாவட்டங்கள் எப்போதுமே உணர்ச்சிப்பூர்வமான அரசியலுக்குப் பெயர் பெற்றவை. இங்கு ஒரு சம்பவம் நடந்தால், தலைவர்கள் நேரில் வந்து ஆறுதல் சொல்வதையே மக்கள் பெரிய ஆறுதலாகவும், தங்களுக்குக் கிடைத்த பாதுகாப்பாகவும் கருதுவார்கள். சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தின் போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அதை மாநிலம் தழுவிய போராட்டமாக மாற்றினார். விளாத்திகுளம் பாலியல் சம்பவத்தின் போது கனிமொழி, திமுக அமைச்சர்கள் நேரில் வந்து நின்றது, அந்த மக்களிடையே திமுக மீதான நம்பிக்கையை விதைத்தது.

ஆனால், தற்போதைய பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்ட விதம் "கார்ப்பரேட் அரசியல்" போல இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. விளாத்திகுளம் மாணவி பாலியல் பலாதாரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க எடப்பாடி நேரில் வர வேண்டும் என தென் மாவட்ட தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள். ''அதுக்குத்தானே ஒட்டுமொத்த கூட்டணியும் மாநில முழுக்க பெரிய போராட்டம் நடந்துச்சு. நானே சென்னையில் கலந்துகிட்டேன். அதுவே போதும்'' என நேரில் வர மறுத்து விட்டாராம். இது தென் மாவட்டத் தலைவர்களைத் திகைக்க வைத்துள்ளது. “கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியது ஒரு அரசியல் கடமை. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்திப்பது ஒரு தலைவனின் கடமை” என்கிறார்கள் விரக்தியில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள்.

34
கள அரசியலில் திமுக vs அதிமுக

அரசியல் களத்தில் திமுக காட்டும் அதே வேகத்தை அதிமுக காட்டத் தவறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போன்ற தலைவர்கள் நேரில் சென்று ஊர்க்காரர்களிடம் பேசி ஆறுதல் சொன்னது, அந்தப் பகுதியில் திமுக கூட்டணிக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது. ஆனால், அதிமுகவோ ‘அறிக்கை அரசியலோடு’ நின்றுவிடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களும் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாதது, தென் மாவட்ட அதிமுகவினரை இன்னும் அப்செட் ஆக்கியுள்ளது. "பாஜக வரவில்லை என்றால் போகட்டும், எடப்பாடியாவது வந்திருக்க வேண்டாமா? அவர் வந்திருந்தால் இந்த விவகாரத்தை அரசுக்கு எதிராக இன்னும் அழுத்தமாகப் பயன்படுத்தியிருக்கலாமே!" என்பதுதான் அவர்களின் ஆதங்கம்.

44
கடம்பூர் ராஜுவின் டேமேஜ் கண்ட்ரோல்

தலைமையின் பிடிவாதத்தால் ஏற்பட்ட பின்னடைவைச் சரிசெய்ய, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு களத்தில் இறங்கிய விதம் கவனிக்கத்தக்கது. யார் வராவிட்டாலும் பரவாயில்லை என்று அவரே நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அங்கிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு போன் போட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச வைத்தது ஓரளவுக்கு அந்தப் பகுதியில் எழுந்த அதிருப்தியைத் தணித்துள்ளது.

"நேரில் வராவிட்டாலும், போனில் பேச வைத்தது ஒரு சிறிய ஆறுதல். ஆனால், ஒரு முதல்வராகத் துடித்தவருக்கு நேரடியாக வந்து மக்களைச் சந்திக்க என்ன தயக்கம்?" என்பதே தென் மாவட்ட நிர்வாகிகளின் குமுறல். தென் மாவட்டத் தலைவர்களின் இந்தத் அதிருப்தி வரும் தேர்தலில் எதிரொலித்தால், அது அதிமுகவிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தைத் தாண்டி, தென் மாவட்ட மக்களின் மனங்களையும் வெல்ல வேண்டுமானால், ஏசி அறையை விட்டு வெளியே வந்து களத்தில் நிற்க வேண்டும் என்பதே நிதர்சனம்.

Read more Photos on
click me!

Recommended Stories