Harsha Sai: ஓடிட்டாருனு பேசினாங்க.. மீண்டும் வந்த பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய்.. வைரலாகும் புதிய வீடியோ

Published : Jun 20, 2026, 08:18 AM IST

YouTuber Harsha Sai: ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த வீடியோவும் வெளியிடாமல் இருந்த ஹர்ஷா சாய், தன்னைச் சுற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

PREV
14
ஹர்ஷா சாய் ரீ என்ட்ரி

ஒரு காலத்தில் தென்னிந்திய அளவில் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட உள்ளடக்க உருவாக்குநர்களில் ஒருவராக இருந்தார் ஹர்ஷா சாய். ஏழை மக்களுக்கு உதவி செய்வது, பிரம்மாண்ட பரிசுகள் வழங்குவது போன்ற காணொளிகள் மூலம் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த அவர், திடீரென இணைய உலகிலிருந்து விலகியதால் பல்வேறு கேள்விகள் எழுந்தன. "வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்", "சிறையில் இருக்கிறார்" என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவின. ஆனால் நீண்ட மவுனத்திற்குப் பிறகு, புதிய காணொளிகளுடன் மீண்டும் களமிறங்கியிருப்பது இணையத்தில் மீண்டும் அவரைப் பற்றி பேச வைத்துள்ளது.

24
யூடியூபர் ஹர்ஷா சாய்

திரைப்பட முயற்சியில் இறங்கிய பிறகே ஹர்ஷா சாயின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. திரைப்படத் தயாரிப்பு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு பின்னர் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளாக மாறியது. ஒரு பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரது பெயர் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர் அவர் எந்த விளக்கமும் அளிக்காமல் நீண்ட காலம் பொதுவெளியில் தோன்றவில்லை. இதுவே அவரைச் சுற்றிய வதந்திகளுக்கு மேலும் இடமளித்தது.

34
மீண்டும் இணைய உலகில் ஆக்டிவ்

சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஹர்ஷா சாய் மீண்டும் தனது சேனலில் புதிய காணொளிகளை வெளியிடத் தொடங்கியுள்ளார். முந்தையதைப் போலவே சமூக சேவையை மையமாகக் கொண்ட உள்ளடக்கங்கள், பொதுமக்களுக்கு உதவும் நிகழ்வுகள் மற்றும் உணர்ச்சிபூர்வமான பதிவுகள் மீண்டும் இடம் பெறுகின்றன. குறுகிய காலத்திலேயே இந்தக் காணொளிகள் அதிக பார்வைகளைப் பெற்று, அவரது ரசிகர் பட்டாளம் இன்று குறையவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

44
ஹர்ஷா சாயின் புதிய வீடியோ

இணைய உலகில் ஒருமுறை உருவாகும் புகழை தக்கவைத்துக்கொள்வது எளிதல்ல. அதிலும் சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் ரசிகர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகப்பெரிய சவாலாகும். அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு ஹர்ஷா சாய் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த ரீ-என்ட்ரி அவரை மீண்டும் முன்னணி உள்ளடக்க உருவாக்குநர்களின் பட்டியலில் சேர்க்கலாம், அல்லது புதிய விவாதங்களுக்கு வழிவகுக்கலாம் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Read more Photos on
click me!

Recommended Stories