New Year 2023 : 2023ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட போகிறீர்களா? இந்த 7 இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க !

First Published Dec 28, 2022, 10:39 PM IST

2023 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட சூப்பரான 7 இடங்களை இங்கு பார்க்கலாம்.

கோவா :

கொண்டாட்டங்களைப் பொறுத்த வரை இந்தியாவில் கோவா மக்களின் முதல் தேர்வாக உள்ளது. புத்தாண்டில் ஒருவர் கடற்கரையில் விருந்து வைக்க விரும்பினால், கோவா ஒரு சிறந்த இடமாக இருக்கும்.

காஷ்மீரில் உள்ள குல்மார்க் :

மலைகளை ரசிப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு காஷ்மீரில் உள்ள குல்மார்க்கை தேர்வு செய்யலாம். அமைதியான பனி மலைகளுக்கு மத்தியில் புத்தாண்டை கொண்டாடலாம். இது பூமியின் சொர்க்கமாக கருதப்படுகிறது.

லடாக் :

சாகசமான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், லடாக் தான் சிறந்த இடம். சிறந்த சாலைப் பயணத்தை விரும்புவோருக்கு, கொண்டாடுவதற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.

மணாலி :

மணாலி இந்தியாவின் பரபரப்பான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மணாலி சிறந்த இடமாக விளங்கும்.

உதய்பூர் :

'கிழக்கின் வெனிஸ்' என்று அடிக்கடி அழைக்கப்படும் ஏரிகளின் நகரமான உதய்பூர். உதய்பூர் என்ற நகரத்தின் மயக்கும் அழகைக் காண சிறந்த தேர்வாக இருக்கும்.

ஊட்டி :

ஊட்டி எப்போதும் புத்தாண்டில் அதன் கண்கவர் பார்ட்டிகள் மற்றும் அழகான இடங்களுக்கு புகழ்பெற்ற இடமாகும். தமிழ்நாட்டில் சிறந்த சாய்ஸ் இதுவாகும்.

ஜிம் கார்பெட் :

தேசிய பூங்காவான கார்பெட் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதி சிறந்த இடமாகும். புராஜெக்ட் டைகர் உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ளது. கார்பெட் ஆமோடில் தங்கலாம் - பூங்காவிற்குள் அமைந்துள்ள ரிசார்ட் மற்றும் ஸ்பா. டெல்லியிலிருந்து 4 மணி நேர பயணத்தில் நதிக்கரை ரிசார்ட்டில் உள்ளது.

click me!