Tamil Nadu CM Vijay: 22 ஆண்டுகளாக ஒரு ஆசை.. பிரியங்கா காந்தி சொன்னதும் உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்

Published : Nov 18, 2026, 07:40 PM IST

பிரியங்கா காந்தியின் வீட்டில் பணியாற்றும் பெண்ணுக்கு, தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து செல்ஃபி எடுக்க வேண்டும் என்பதுதான் நீண்ட நாள் ஆசை! இதை அறிந்த பிரியங்கா காந்தி செய்த காரியமும், அதற்கு விஜய் அளித்த சர்ப்ரைஸ் பதிலும் கவனம் ஈர்த்துள்ளது!

PREV
13
பிரியங்கா காந்தி வீட்டுப் பணியாளரின் நீண்ட நாள் ஆசை!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய 'Belonging: A Journey of Love' என்ற நினைவுக் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா நவம்பர் 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சி முடிந்த பின்னர் விஜய்யைச் சந்தித்த பிரியங்கா காந்தி வாத்ரா, தன்னுடைய வீட்டில் பணியாற்றும் பெண் ஒருவரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அந்தப் பெண் கடந்த 22 ஆண்டுகளாகத் தனது வீட்டில் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, அவருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இருப்பதாகவும், அதை விஜய்யால் நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

23
விஜய் செய்தது என்ன?

இதைக் கேட்ட விஜய், அந்தப் பெண்ணின் ஆசை என்ன என்றும், தன்னால் என்ன செய்ய முடியும் என்றும் அன்புடன் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, அந்தப் பெண் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை என்றும், அவரை நேரில் சந்தித்து பேச வேண்டும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து எந்தவித தயக்கமும் காட்டாமல் விஜய் அந்தப் பெண்ணுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதுமட்டுமின்றி அவரிடம் நலம் விசாரித்து சிறிது நேரம் அன்பாகப் பேசியுள்ளார்.

தனக்குப் பிடித்த நடிகரும், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அந்தப் பெண்ணின் நீண்ட நாள் ஆசை இவ்வாறு நிறைவேறியுள்ளது.

33
இணையத்தில் கவனம் பெறும் நெகிழ்ச்சியான தருணம்!

இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் வெளியாகியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, பிரியங்கா காந்தி தனது வீட்டில் நீண்ட காலமாகப் பணியாற்றும் பெண்ணின் விருப்பத்தை நினைவில் வைத்து, அவரை விஜய்யிடம் அறிமுகப்படுத்தியதும், விஜய் உடனடியாக அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதும் இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.

அந்தப் பெண்ணின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

அரசியல் தலைவர்கள் சந்திக்கும் உயர்மட்ட நிகழ்ச்சியில், ஒரு சாதாரண ரசிகையின் நீண்ட நாள் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்தச் சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories