காற்று மாசுபாடு 'மிக மோசமான' நிலையை எட்டியுள்ளதால், அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிமீறும் வாகனங்கள் மீது கடும் அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக, பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க டெல்லி அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. நகரின் காற்றுத் தரக் குறியீடு (AQI) ‘மிக மோசமான’ (கடுமையான) நிலையை எட்டியுள்ள நிலையில், மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியில் உள்ள 40 கண்காணிப்பு நிலையங்களில் 27 இடங்களில் காற்றுத் தரம் மிகவும் மோசமான நிலையில் பதிவாகியுள்ளது.
24
டிசம்பர் 18 முதல் விதிகள்
இந்த சூழ்நிலையில், டிசம்பர் 18 முதல் டெல்லியில் சில வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா அறிவித்துள்ளார். செல்லுபடியாகும் PUC (மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்) சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படாது. மேலும், டெல்லிக்கு வெளியில் இருந்து வரும் BS-6 தரநிலைக்கு கீழான வாகனங்களுக்கு நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
34
மாசு கட்டுப்பாடு
இதுகுறித்து பேசிய அமைச்சர் சிர்சா, “டிசம்பர் 17 வரை வாகன உரிமையாளர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. அதன் பிறகு, செல்லுபடியாகும் PUC சான்றிதழ் இல்லாத எந்த வாகனத்திற்கும் வழங்கப்படாது” என்று தெரிவித்துள்ளார். கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் விதிமீறல் செய்தால், கடும் அபராதம் விதிக்கப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர், “9 அல்லது 10 மாதங்களில் மாசுபாட்டை முழுமையாக ஒழிப்பது எந்த அரசுக்கும் சாத்தியமில்லை.
இருப்பினும், முந்தைய ஆட்சியைவிட நாங்கள் தினசரி AQI அளவைக் கட்டுப்படுத்தியுள்ளோம். மேலும், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு (DPCC) இதுவரை மாசுபாட்டை ஏற்படுத்திய நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு ரூ.9.21 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணியாளர்கள் மரம் அல்லது நிலக்கரி எரிப்பதைத் தவிர்க்க, 10,000 மின்ஹீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன, டீசல் ஜெனரேட்டர்கள் மண்டபங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, விதிமீறும் திருமண மண்டபங்கள் சீல் வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.