அமெரிக்க அதிபரையே மிஞ்சிய நம்ம பிரதமர்.. மோடி செய்த வரலாற்று சாதனை.. உலகமே வியக்குது

Published : Feb 26, 2026, 11:04 AM IST

பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் பெரிய சாதனையை படைத்துள்ளார். மற்ற உலக மற்றும் இந்தியத் தலைவர்களை விட அதிக பின்தொடர்பவர்களைக் கொண்டு, அவர் தனது உலகளாவிய டிஜிட்டல் செல்வாக்கை நிரூபித்துள்ளார்.

PREV
15
உலகில் முதல் தலைவர்

பிரதமர் நரேந்திர மோடி உலக அரசியல் வரலாற்றில் புதிய டிஜிட்டல் மைல்கல்லை எட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டு இந்த சமூக வலைதளத்தில் இணைந்த அவர், தொடர்ந்து செயலில் இருந்து உலகளாவிய மக்களுடன் நேரடி தொடர்பை உருவாக்கியுள்ளார். அவரது பதிவுகள் அரசியல், கலாச்சாரம், சுற்றுப்பயணம் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு போன்ற பல அம்சங்கள் உள்ளடக்கியவையாக உள்ளது.

25
இன்ஸ்டாகிராமில் மோடி அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சுமார் 43 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்தோனேசியா, பிரேசில், துருக்கி, அர்ஜென்டினா தலைவர்களின் மொத்த பின்தொடர்பவர்களையும் விட மோடியின் தனிப்பட்ட எண்ணிக்கை அதிகம் குறிப்பிடத்தக்கது. இது அவரது உலகளாவிய டிஜிட்டல் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது.

35
சமூக ஊடக ஆதிக்கம்

இந்திய அரசியல் வட்டாரத்திலும் பெரிய வித்தியாசம் உள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் பின்தொடர்பவர்களையும் விட மோடி மிகுந்த முன்னிலையில் உள்ளார். இது அவரது சமூக ஊடக ஆதிக்கத்தை காட்டுகிறது.

45
கருத்துக்கணிப்புகளில் முன்னிலை

மேலும், உலகளாவிய கருத்துக்கணிப்புகளிலும் அவர் முன்னிலையில் உள்ளார். பல்வேறு சர்வேகளின் படி, அவரது ஒப்புதல் மதிப்பீடு 67 முதல் 70 சதவீதம் வரை உள்ளது. இது அவரை உலகத் தலைவர்களில் முதலிடத்தில் நிறுத்துகிறது.

55
உலக அரசியலில் மோடி முன்னிலை

டிஜிட்டல் தளங்களில் நேரடி தொடர்பு மற்றும் உயர்ந்த ஒப்புதல் மதிப்பீடு ஆகியவை இணைந்து, பிரதமர் மோடியை உலக அரசியலில் தனித்துவமான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories