டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
24
குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் கைது
இந்த சம்பவத்திற்கு காரணமான ஒருத்தரையும் விடக்கூடாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
34
நவ்காம் காவல் நிலையத்தில் வெடி விபத்து
இந்நிலையில் இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த பெரும் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வெடிவிபத்தில் காவல் நிலையம் மற்றும் வாகனங்கள் எரிந்து நாசமாகின.
பரிதாபாத்தில் பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 360 கிலோ வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட பொருட்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளும் காவல் நிலையத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.