மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு! கடல் போல் காட்சியளிக்கும் பக்தர்கள்! இதுவரை 62 கோடி பேர் புனித நீராடல்!

Published : Feb 26, 2025, 11:03 AM IST

உத்தர பிரதேசத்தில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் நிறைவு பெற்றது. கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர், மேலும் சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் கின்னஸ் சாதனை படைத்தனர்.

PREV
15
மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு! கடல் போல் காட்சியளிக்கும் பக்தர்கள்! இதுவரை 62 கோடி பேர் புனித நீராடல்!
Devotees take holy dip in Maha Kumbh (Photo/ANI)

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளாவில் இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். 

25

இதுவரை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, முகேஷ் அம்பானி, தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகள் மற்றும் விவிஐபிக்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். திரிவேணி சங்கமத்தில் இதுவரை 63 கோடிக்கம் அதிகமானோர் நீராடி வழிபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

35
Maha Kumbh 2025: Stunning DRONE View of Triveni Sangam in Prayagraj!

மகா சிவராத்திரியான இன்றுடன் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுவதையோட்டி முன் எப்போதும் இல்லாத வகையில் கடல் போல் லட்சக்கணக்கான மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனை ட்ரோன் காட்சிகள் மூலம் காண முடிந்தது. ஆகையால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

45

இதுதொடர்பாக  பக்தர் ஒருவர் ANI செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்: மஹா கும்பத்தின் கடைசி நாளில் கலந்து கொண்டது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இங்கு வந்தோம்... மஹா கும்பத்தின் கடைசி நாள் என்பதால் இங்கு வந்தோம். கங்கா மாதாவின் ஆசீர்வாதம் கிடைத்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று பக்தர் ஒருவர் கூறினார்.

55
Mahakumbh Mela

இதனிடையே 15,000 சுகாதாரப் பணியாளர்கள் பல இடங்களில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டதன் மூலம் இது ஒரு புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. இருப்பினும், இந்த சாதனை முயற்சியின் இறுதி முடிவுகள் பிப்ரவரி 27 அன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Read more Photos on
click me!

Recommended Stories