முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளின் வகைகள்
இந்திய ரயில்வே பல்வேறு தேவைகள் மற்றும் பட்ஜெட்டுகளுக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை வழங்குகிறது.
முதல் AC (1A) - தனியார் கேபின்களைக் கொண்டுள்ளது. ஒரு நட்சத்திர ஹோட்டலின் வசதிகளை இங்கே காணலாம்.
இரண்டாவது AC (2A) - வசதியான இருக்கைகளைக் கொண்டுள்ளது. தனியுரிமையும் உள்ளது. குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வது உங்களின் சோர்வை போர்க்கும்.
மூன்றாவது ஏசி (3A) – ஸ்லீப்பர் பெர்த்களுடன் கூடிய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஏசி பெட்டிகள். டிக்கெட் விலைகள் 1A, 2A ஐ விடக் குறைவு.
ஏசி சேர் கார் (CC) – இந்த பெட்டிகளில் அமர்ந்து பயணிக்க வேண்டும். பெர்த்கள் இருக்காது. இதில் ஏசி இருப்பதால் குறுகிய மற்றும் நீண்ட பயணங்களுக்கு ஏற்றது.
ஸ்லீப்பர் வகுப்பு (SL) – நீண்ட தூர பயணிகளுக்கு ஏசி அல்லாத, செலவு குறைந்த விருப்பம் ஸ்லீப்பர் வகுப்பு. குறைந்த செலவில் நீங்கள் சோர்வின்றி பயணிக்கலாம்.
இரண்டாம் இருக்கை (2S) – இந்த பெட்டிகளில் குறைந்த செலவில் வழக்கமான இருக்கைகள் உள்ளன. ஏசி இல்லை. பெர்த்களும் இருக்காது. நீங்கள் எவ்வளவு தூரம் உட்கார்ந்தே பயணிக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை.
சில நிமிடங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்! இந்த ஐடியா ட்ரை பண்ணுங்க!